New Update

BJP MP GVL Narasimha Rao attacked by Shoe in Delhi
இதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.
BJP MP GVL Narasimha Rao attacked by Shoe in Delhi
BJP MP GVL Narasimha Rao attacked by shoe : டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் மற்றும் எம்.பியுமான ஜி.வி.எல். நரசிம்மராவ் உட்பட நிறைய தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நரசிம்மராவ், மத்தியப்பிரதேசம் போபாலில் பாஜக சார்பில் நிறுத்தப்படும் சாத்வி பிரக்யா தக்கூர் சிங் குறித்தும், அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான நிலைப்பாடு குறித்தும் பேசினார்.
காங்கிரஸ் ஆட்சியின் போது அவர் மீது தேவையற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறிக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், காலணி ஒன்றை நரசிம்மராவ் மீது வீசியுள்ளார் அங்கு வந்திருந்த மருத்துவர் ஒருவர்.
WATCH: Shoe hurled at BJP MP GVL Narasimha Rao at the BJP headquarters in New Delhi. https://t.co/ZA2cRGK6ey pic.twitter.com/BmK5j8vFT1
— The Indian Express (@IndianExpress) 18 April 2019
அது நரசிம்மராவ் மீது படவில்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற சில மணித்துளிகளுக்குள் அவரை கட்சியினர் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர். இதனை சிறிதும் பொருட்படுத்தாது எம்.பி. தன்னுடைய செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.