New Update
/
கன்னியாகுமரி குமரி மாவட்டம் 1956-க்கு முன்பு வரை கேரள மாநிலத்தின் பகுதியாக இருந்தது. கேரள மாநிலத்திற்கு "தெய்வத்தின் பூமி" என்ற புகழ் பெயர் இன்றும் நிலவுகிறது. குமரி மாவட்டம் கேரள மாநிலத்தின் பகுதியில் இருந்து பிரிந்த பின் குமரி மாவட்டத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் காளிமலை உச்சியில் ஆண்டு தோறும் கொண்டாடும் விழா இவ்வாண்டும் நடந்தது.
குழித்துறை மறைமாவட்டம் பகுதியில் குருசு மலை வழிபாடு மலை உச்சியில் திருப்பலி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதை போன்று இந்து மதத்தை சேர்ந்த மக்கள் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி நாளில், தமிழக, கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 3,500-அடி உயரத்தில் உள்ள காளி மலை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் காளி மலை உச்சிக்கு சென்று பொங்கல் இட்டு வழி பட்டார்கள்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் இடைவெளி இன்றி 10-வது முறையாக போட்டியிட்ட பொன். ராதாகிருஷ்ணன் சித்ரா பவுர்ணமி பொங்கல் விழாவில் காளி மலை உச்சியில் (3,500)அடி உயரத்தில் நடை பெற்ற விழாவில் பங்கேற்றார்.
பொங்கல் விழாவில் பங்கேற்ற பெரும் எண்ணிக்கையில் ஆன மக்கள் அந்த இடத்தை விட்டு கலைத்து சென்ற விட்ட நிலையில், காளி மலையின் 3,500 அடி உயரமுள்ள மலையில் உள்ள பாறை ஒன்றில், கன்னியாகுமரி மக்களவை பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென தனியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார்.சுமார் 15-நிமிடங்கள் தியானம் செய்தார். பொன்னார் தியானத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
செய்தி: த.இ.தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.