அரிதிலும் அரிதான காட்சி.. தமிழக இளைஞரின் கேமிராவில் சிக்கிய கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி ஜோடிகள்!

ஆனால் கருஞ்சிறுத்தை உடன் சிறுத்தை புலி இதுவே முதன்முறை.

தமிழக காட்டில் இப்படியொரு அரிதான காட்சியா? அதுவும் நம்மூர் பையன் எடுத்த ஃபோட்டோவா இது? இன்றைய தினம் சமூக வலைத்தளமே இதைப்பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வில் பர்ராட் என்ற பிரிட்ஷ் புகைப்பட கலைஞர் எடுத்த கருஞ்சிறுத்தை புகைப்படம் உலகளவில் பேசப்பட்டது.

முற்றிலும் அழிந்து விட்டதாக கூறப்பட்ட கருஞ்சிறுத்தை 100 ஆண்டுகள் கழித்து அவரின் கேமிராவில் சிக்கியது. கென்யாவில் இருக்கும் அடர்ந்த காட்டில் நடு இரவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. காட்டில் வைக்கப்பட்டிருந்த அனைத்து காமிராவில் சிக்காத இந்த கருஞ்சிறுத்தை வில் பர்ராட் லென்சில் விழுந்தது தான் பலரின் பேச்சாக இருந்தது. சுமார் 4 மாதங்கள் காட்டிலே தவம் இருந்து இந்த புகைப்படத்தை எடுத்ததாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு நீலக்கீரி மாவட்டத்தில் கருஞ்சிறுத்தையுடன் சிறுத்தை புலி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கருஞ்சிறுத்தை இனத்தை பார்ப்பது முற்றிலும் அரிது. அப்படி இருக்க கருஞ்சிறுத்தையுடன் சிறுத்தை புலி சேர்ந்து இருப்பது அரிதிலும் அரிதான காட்சி.

இந்த புகைப்படத்தை எடுத்தவர் நீலகிரியை சேர்ந்த தாஸ் சந்திரசேகர் என்ற இளைஞர். வனவிலங்கு புகைப்பட கலைஞரான இவரின் கண்ணில் இருந்து ஆச்சரியமும் பூரிப்பும் இன்னும் அடங்கவில்லை. இதோ பிரபல செய்தி நிறுவனத்திடம் அவர் பகிர்ந்திருக்கும் வரிகள்,” “என் கண்களை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. நான் அவர்களை (கருஞ்சிறுத்தை, சிறுத்தை புலி) சந்தித்த தருணம்.

அவர்களை எந்தவித தொந்தரவு செய்யாமல் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். நீலகிரி மாவட்டம் கோட்டகிரியில் சிறுத்தை புலி மற்றும் கருஞ்சிறுத்தை ஒன்று நடமாடுவதாக என்னிடம் பலரும் கூறினர்.

சற்றும் யோசிக்காமல் உடனே புறப்பட்டேன். அதிகாலை சரியாக 4 மணி இருக்கும் தேயிலை எஸ்டேட்டில் இருக்கும் பாறை மேலே இந்த ஜோடிகள் அமர்ந்திருந்தனர். திகைப்புடனே கேமராவை எடுத்து கிளிக் செய்தேன். இதுவரை எத்தனையோ ஜோடிகள், (யானை, புலி, சிங்கம்) புகைப்படம் எடுத்திருக்கிறேன். ஆனால் கருஞ்சிறுத்தை உடன் சிறுத்தை புலி இதுவே முதன்முறை.

என் கனவு உண்மையானது போல் உணர்கிறேன். வன விலக்கு புகைப்பட கலைஞராக என் வாழ்வில் நான் எடுத்த மிக மிக அற்புதமான அரிதான புகைப்படங்களில் இதுவும் ஒன்று.” என்று ஆனந்த கண்ணீருடன் இதை பகிர்ந்திருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close