New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/27/Wr3Xp5AQNWCEeLuEnJDC.jpg)
கருஞ்சிறுத்தை ஒன்று முயலை கவ்வி எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கோவை கோட்டத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இதில் யானைகள் மட்டும் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.
இந்நிலையில், தடாகம், கணுவாய் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவை, வனப்பகுதியில் உள்ள பாறையில் படுத்து ஓய்வு எடுக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது.
இதனிடையே, முயலை கருஞ்சிறுத்தை கவ்வி எடுத்துச் செல்லும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ கோவை அருகே எடுக்கப்பட்டது எனக் கூறப்படும் நிலையில், அதனை நிரூபிக்கும் விதமான வேறு எந்த ஆதாரங்களும் தென்படவில்லை.
எனினும், தடாகம், கணுவாய் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருஞ்சிறுத்தையின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
செய்தி - பி.ரஹ்மான்
கருஞ்சிறுத்தை ஒன்று முயலை கவ்வி எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.#Panther #BlackPanther pic.twitter.com/fwWkn0T9gc
— Indian Express Tamil (@IeTamil) December 27, 2024
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.