ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு பார்ட்டிக்குப் போன இளைஞர்களுடன் சண்டை ஏற்பட்டதால், விடுதியின் பவுன்சர்கள் கட்டைகளைக் கொண்டு விரட்டி அடித்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி உள்ளது.
ஆக்ராவில் உள்ள ஒரு இரவு விடுதியில் பவுன்சர்கள், இளைஞர்களை கட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் ஜூன் 22-ம் தேதி தாஜ் நாக்ரியில் உள்ள சோரோ: தி லக்சுரி நைட் கிளப், கட்டம் 2-ல் நடந்துள்ளது. இந்த இரவு விடுதியில் ரஷ்ய நடனத்தால் மோதல் ஏற்பட்டுள்ளது.
அதே போல, பலரும் ரீல்ஸ் மோகத்தால் தங்கள் விலைமதிக்க முடியாத பொருட்களை இழந்துள்ளார்கள். சிலபேர், சில சமயங்களில் தங்கள் உயிரையும் இழக்கிறார்கள். எவ்வளவுதான் எச்சரித்தாலும் ரீல்ஸ் மோகம் அப்படியேதான் இருக்கிறது. பிறகு, ரீல்ஸ்க்காக ரிஸ்க் எடுத்து மாட்டிக்கொண்டு வருந்துகிறார்கள்.
அப்படி, குஜராத்தில் ரீல்ஸ் மோகம் கொண்ட இளைஞர்கள், குஜராத்தின் கட்ச் பத்ரேஷ்வர் கடற்கரையில், இரண்டு மஹிந்திரா தார் வாகனங்களுடன் ஸ்டண்ட் செய்ய முயன்றபோது, அந்த இளைஞர்கள் கடலில் சிக்கித் தவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சிவப்பு மற்றும் வெள்ளை நிற தார் வாகனங்களுடன் வலுவான கடல் நீரோட்டத்தில் இளைஞர்கள் குழு சிக்கிக்கொண்டதை வீடியோவில் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“