விமானத்தில் செல்ஃபி கேட்ட ரசிகர்... அடித்து துவைத்த மைக் டைசன்... வைரல் வீடியோ

Viral News Update : டைசன் தற்போது தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் தயாராவி வரும் லிகர் என்ற படத்தில் நடித்துள்ளார்

Viral News Update : டைசன் தற்போது தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் தயாராவி வரும் லிகர் என்ற படத்தில் நடித்துள்ளார்

author-image
WebDesk
New Update
விமானத்தில் செல்ஃபி கேட்ட ரசிகர்... அடித்து துவைத்த மைக் டைசன்... வைரல் வீடியோ

Boxer Mic Tyson In Flight Fight Issue : பிரபல குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், விமான பயணத்தின் போது தனக்கு தொந்தரவு கொடுத்த சக பயணியை தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment

குத்துண்டை உலகின் பிரபலமான வீரராக இருப்பவர் மைக் டைசன். சர்சதேச குத்துச்சண்டை போட்டியில் அதிக வெற்றிகளை குவித்த விரரான இவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமான ஒன்று. மேலும் அடிதடி, பாலியல் வழக்கு, போதை பொருள் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வரும் மைக் டைசன், பொது நிகழ்ச்சிகளில் கூட பலமுறை தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தி பொதுமக்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது விமான பயணத்தின் போது தன்னிடம் செல்பி எடுக்க கேட்டு தொந்தரவு செய்துகொண்டிருந்த சக பயணி ஒருவரை விமானத்திலேயே சமாரியாக தாக்கியுள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த மைக் டைசனை பார்த்த ரசிகர் ஒருவர் அவரிடம் செல்பி எடுக்க ஆசைப்பட்டு அவரிடம் பேசுவதற்காக  முயற்சி செய்துள்ளார். முதலில் இதை கண்டுகொள்ளாத மைக் டைசன் ஒரு கட்டத்தில் கடுப்பான மைக் டைசன், அந்த ரசிகரை அவரின் சீட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

Advertisment
Advertisements

இதனால் பலத்த காயமடைந்த அந்த ரசிகர்கள் முகத்தில் ரத்த காயங்களுடன் அமர்ந்திருக்கிறார். இதை பார்த்த சக பயணிகள் டைசன் அடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்ளில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து சக விமான பயணி ஒருவர் கூறுகையில், டைசனுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்தக்கொண்டே இருந்தார். அவரை டைசன் அமைதியாக இருக்கும்படி பலமுறை கூறியும் மீண்டும் மீண்டும் அவர் தொந்தரவு செய்ததால், டைசன் அவரை அடித்துவிட்டார் என்று கூறியுளளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் டைசன் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல என்று கூறி வருகின்றனர்.

டைசன் தற்போது தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் தயாராவி வரும் லிகர் என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Viral Video Tamil News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: