சூப்பர்டா தம்பிகளா...: சைக்கிளை வாங்கி தரக்கோரி போலீசில் புகார் - கேரளாவில் தான் இந்த விநோதம்
Kerala police : ரிப்பேர் சரி செய்ய கொடுத்த சைக்கிளை வாங்கி தரக்கோரி சகோதரர்கள் போலீசில் புகார் செய்து, சைக்கிளை பெற்ற சம்பவம், அண்டை மாநிலமான கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
ரிப்பேர் சரி செய்ய கொடுத்த சைக்கிளை வாங்கி தரக்கோரி சகோதரர்கள் போலீசில் புகார் செய்து, சைக்கிளை பெற்ற சம்பவம், அண்டை மாநிலமான கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
Advertisment
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இளம்பியாட் பள்ளியில் சகோதரர்கள் படித்து வந்தனர். இவர்கள் பயன்படுத்தி வந்த சைக்கிள் ரிப்பேர் ஆகவே, அருகில் உள்ள சைக்கிள் ரிப்போர் பார்க்கும் கடையில், கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி தந்துள்ளனர். அந்த கடைக்காரரும், இவர்களிடமிருந்து ரூ.200 அட்வான்சாக பெற்றுள்ளார்.
ஒரு மாதம் கடந்தும், அவர்களுக்கு சைக்கிள் கிடைக்கவில்லை. அவர்களும் கடைக்கு சென்று விசாரிக்கலாம் என்று சென்றால், பெரும்பாலான நேரம் அந்த கடை பூட்டியே இருக்கும்.இதனால், யாரிடம் விசாரிப்பது என்பது தெரியாமலேயே அவர்கள் திரும்பிவிடுவர்.
தர்பாரின் 'Chummakizhi' பாடல் ரஜினி ரசிகர்களை கவர்ந்ததா ?
பொறுத்து பொறுத்து பார்த்த அவர்கள், நவம்பர் 25ம் தேதி, மேப்பாயூர் போலீஸ் ஸ்டேசனில், தங்கள் சைக்கிளை மீட்டுத்தரக்கோரி புகார் அளித்தனர். அதில் உண்மைத்தன்மை இருந்ததையடுத்து, போலீசார் அந்த புகாரை ஏற்றுக்கொண்டனர்.
போலீசார் விசாரணை நடத்த சென்றபோதும் கடை பூட்டப்பட்டிருந்தது. கடை உரிமையாளரின் வீட்டுக்கு சென்றே போலீசார் விசாரணை நடத்தினர். கடை உரிமையாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், தனது வீட்டில் விரைவில் நடைபெற உள்ள திருமணத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததன் காரணத்தினாலும் தன்னால் கடையை சரிவர திறக்க முடியவில்லை என்று கடை உரிமையாளர் ஒப்புக்கொண்டார். சைக்கிளை உடனடியாக சரி செய்து தர ஒப்புக்கொண்டதன்பேரில், அன்றைய தினமே சைக்கிள், அந்த சிறுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
கேரள போலீசார், சகோதரர்கள் அளித்த புகார், சைக்கிளை திரும்ப பெற்ற மகிழ்ச்சியில் சிறுவர்கள் என அவர்களின் போட்டோவை, கேரள போலீஸ் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டனர். இந்த பதிவு தற்போது டிரென்ட் ஆகி வருகிறது.