இந்திய ரயில்வே, இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பரபரப்பான வீடியோவை பகிர்ந்து, ரயில் பயணங்களில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
'ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது', 'ஓடும் ரயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது' என்று எத்தனை இடங்களில் எழுதி வைத்திருந்தாலும் எத்தனை முறை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்று சில இளைஞர்கள் இருக்கிறார்கள். எப்போதாவது அவர்கள் விழுந்து சில்லறையை வாரும்போதுதான் கொஞ்சம் நினைத்துப்பார்ப்பார்கள்.
चलती हुई ट्रेन से उतरना- चढ़ना जानलेवा है, इन्हें देखिए स्टंट के चक्कर में अपनी जान से हाथ धो बैठते लेकिन हर बार किस्मत इनके साथ नहीं होगी।
कृपया ऐसा ना करें और दूसरों को भी ना करने दे, जीवन अमूल्य है स्टंट के चक्कर में अपनी जिंदगी को दांव पर ना लगाएं!! pic.twitter.com/tpyaAYJPNM
— Ministry of Railways (@RailMinIndia) February 18, 2020
இந்திய ரயில்வே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த இளைஞர் ஒருவர் ரயில் பாதை ஓரத்தில் குதித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து ரயில் பாதை ஜல்லி கற்களில் புரண்டு செல்கிறார். அவர் ரயிலில் சிக்கிக்க்கொண்டார் ரயிலில் இருந்த அனைவரும் பதறி கத்தி கூச்சலிடும்போது அவர் அதிர்ஷ்டவசமாக ரயிலில் சிக்காமல் தப்பினார். லேசான சிராய்ப்புகளுடன் அந்த இளைஞர் உயிர் தப்பியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே, ஓடும் ரயிலில் இருந்து இறங்குவதோ ஏறுவதோ ஆபத்தானது. ஒரு சாகத்துக்காக உயிர் இழப்பதைப் பாருங்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் அவர்களுடன் இருக்காது.
தயவுசெய்து யாரும் இதைச் செய்யாதீர்கள். மற்றவர்களும் இதைச் செய்ய விடாதீர்கள். உயிர் விலைமதிப்பற்றது சாகசங்களில் உங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் !! என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகிவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.