/tamil-ie/media/media_files/uploads/2019/09/down-syndrom.jpg)
down syndrome, down syndrome proposal,Boy with down syndrome proposes to girlfriend,டவுன் சிண்ட்ரோம், மாணவர் புரோபஸல், viral proposal, trending,Tamil indian express news
Boy with down syndrome proposes to girlfriend, netizens emotional: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவர் அதே போல டவுண்ட் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட மாணவியிடம் ஹோம்கமிங் ப்ரொபஸல் செய்தவீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர் நிலைப்பள்ளியில் டேவிட் கோவன் மற்றும் சரிஸ் மேரி கார்சியா இருவரும் டவுன் சிண்ட்ரோம் எனும் ஒரு மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்.
இந்த நிலையில் பள்ளியில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கே சக மாணவிகளுடன் சரிஸ் மேரி கார்சியா நின்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது டேவிட் கோவன் தனது ஹோம்கமிங் புரொபஸலை சரிஸ் மேரி கார்சியாவிடம் தெரிவிக்க விரும்பினார். அதற்காக அவர் தனது கைகளில் வண்ணவண்ன பலூன்களை பிடித்துக்கொண்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு அட்டையில் ஹோம் கமிங் புரோபஸலை எழுதி வைத்துக்கொண்டு நேராக சென்று தனது புரொபஸலை தெரிவித்தார். இருவரும் இதனை மகிழ்ச்சி கலந்த உற்சாகத்துடன் கார்சியா பெற்றுக்கொண்டார். அங்கே சுற்றியிருந்த மற்ற பெண்களும் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வை அங்கிருந்த ஒருவர் வீடியோ காட்சியாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை சரிஸ் மேரி கார்சியா ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 2.7 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. டேவிட் கோவன் தனது தோழிக்கு ஹோம்கமிங் புரோபஸல் தெரிவித்த இந்த வீடியோவைப் பார்த்த பலரும் தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.
டவுன் சிண்ட்ரோம் குறைபாடால் பாதிக்கப்பட்ட டேவிட் கோவனும் சரிஸ் மேரி கார்சியாவும் 3 வயதில் இருந்தே ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள். ஆர்லாண்டோவில் பேச்சு பயிற்சி சிகிச்சைக்காக இருவரும் ஒன்றாக சென்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.