New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/10/cats-6.jpg)
பலரும் இந்த விளம்பரத்தை நீக்கியிருக்க கூடாது என்று தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். நீங்களும் கூட இந்த விளம்பரத்தை பாருங்கள். உங்களுக்கு ஏதாவது முரணாக தெரிகிறதா?
Ekatvam : இந்து பெண் ஒருவருக்கு இஸ்லாமியர் வீட்டில் இந்து முறைப்படி வளைகாப்பு நடத்துவது போன்ற காட்சிகளுடன் தனிஷ்க் நகை விளம்பரம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளில் இருக்கும் கலைஞர்களின் உழைப்பில் உருவாகும் நகைகளை, இந்த வருடம் எகத்வம் என்ற பெயரில், தீபாவளிக்கு அறிமுகம் செய்து விளம்பரப்படுத்தியது.
அதில் இஸ்லாமியர் ஒருவரை மணந்து கொண்ட பெண்ணுக்கு வளைகாப்பு , இந்து முறைப்படி நடக்கிறது, அப்போது, இஸ்லாமியர்கள் வழக்கத்தில் இது போன்று நிகழ்ச்சிகள் நடக்காதே என்கிறார் அவர். மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பண்பு அனைத்து குடும்பத்திலும் இருக்கிறதே என்று மாமியார் அதற்கு பதில் கூறுவார். இந்த காட்சிகளை பார்த்த யாருக்குமே இதில் இருக்கும் அன்பு புலப்படும்.
So Hindutva bigots have called for a boycott of @TanishqJewelry for highlighting Hindu-Muslim unity through this beautiful ad. If Hindu-Muslim “ekatvam” irks them so much, why don’t they boycott the longest surviving symbol of Hindu-Muslim unity in the world -- India? pic.twitter.com/cV0LpWzjda
— Shashi Tharoor (@ShashiTharoor) October 13, 2020
ஆனால், இதனை லவ் ஜிஹாத் என்ற பெயரில் அரங்கேறும் நிகழ்வுகளுக்கு ஒத்துழைப்பு தந்து ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது என்று வலதுசாரி அமைப்புகள் நேற்று, பைக்காட் தனிஷ்க் என்ற ஹேஷ்டேக் நேற்று முழுவதும் ட்விட்டரில் ட்ரெண்டாகி, இறுதியில் அந்த விளம்பரத்தை யுடியூபில் இருந்து நீக்கும் முடிவையே எடுத்துவிட்டது அந்நிறுவனம். இது குறித்து சசி தரூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த விளம்பரத்தை பதிவிட்டு, இந்து - இஸ்லாமியர்கள் இடையே இருக்கும் ஒற்றுமையை அழகாக கூறும் இந்த எகத்வத்தை அவர்கள் புறக்கணித்தால், ஏன் அவர்கள் உலகியேலே நீண்டு வாழும் இந்து - இஸ்லாமியர் ஒற்றுமை அடையளமான இந்தியாவை புறக்கணிக்க கூடாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பலரும் தனிஷ்க் இந்த விளம்பரத்தை நீக்கியிருக்க கூடாது என்று தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். நீங்களும் கூட இந்த விளம்பரத்தை பாருங்கள். உங்களுக்கு ஏதாவது முரணாக தெரிகிறதா?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.