/tamil-ie/media/media_files/uploads/2020/02/New-Project-2020-02-17T195547.539.jpg)
bride helping groom at wedding ceremony, மணமகனின் கண்களில் விழுந்த தூசியை துடைத்த மணமகள், திருமண வீடியோ வைரல், bride helping groom remove eye dust, marriage video viral, bride remove eye dust viral video
மணமேடையில் மணமகன் தாலி கட்டும்போது மணமகன் கண்ணில் தூசு விழுந்ததால் சிரமம் ஏற்பட்டு கண்கலங்கியபோது மணமகள் கணவரின் கண்களைத் துடைத்துவிட்டு அனைவரையும் நெகிழச் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சமூகத்தில் ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் எனபது மிக முக்கியமானது. ஒரு பெண்ணுக்கு நல்ல குணநலன் கொண்ட கணவன் அமைவதும் நல்ல மனைவி அமைவதும் முக்கியமான விஷயம். அதனால்தான், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பழமொழியும் சொல்கிறார்கள். திருமணத்தில் கைப்பிடிக்கும் தம்பதிகள் மரணம் வரை இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக்கொண்டு வாழ்க்கைப் படகை செலுத்துகிறார்கள். அதனால், கணவன் மனைவி உறவு என்பது குடும்ப அமைப்பில் மிக முக்கியமானதாக இருக்கிறது.
கண்ணை இமை காப்பது போல் இது தான்????????
வாழ்க மனமக்கள்???? pic.twitter.com/SC0iUlCmt9— ????கவிதாமணாளன்???? (@Ravichandranjs2) February 13, 2020
அண்மையில் நடந்த ஒரு திருமணத்தில், மணமகன் தாலி கட்டும்போது எல்லோரு அட்சதை தூவ மணமகன் கண்ணில் தூசு விழுந்துவிடுகிறது. அதனால், மணமகன் கண்கலங்கி சிரமப்படும்போது, மணமகள் கணவரின் கண்களைத் துடைத்து சரி செய்கிறார். மனைவியின் அன்பில் நெகிழ்ந்துபோன, மணமகன் கண்ணில் தூசு விழுந்ததுகூட மறந்துபோய் வெட்கமும் அன்பும் வெளிப்பட சிரிக்கிறார். அவர் மட்டுமல்ல திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் நெகிழ்ந்துபோய் மனமகளின் அன்பைக் கண்டு புன்னகைத்தனர். இதைத்தான் உன் கண்ணில் நீர்வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி என்று பாடியிருப்பார்களோ. இந்த பாடல் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு பொருந்தும் என்பதை இந்த மணமகள் நிரூபித்திருக்கிறார்.
திருமணத்தில் அந்த நெகிழ்ச்சியான நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. வாசர்களும், மணமேடையில் நடந்த அந்த காதல் மிளிரும் வீடியோவைப் பாருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.