உன் கண்ணில் நீர் வழிந்தால்… மணமேடையில் நெகிழ வைத்த மணப்பெண்; வைரல் வீடியோ

மணமேடையில் மணமகன் தாலி கட்டும்போது மணமகன் கண்ணில் தூசு விழுந்ததால் சிரமம் ஏற்பட்டு கண்கலங்கியபோது மணமகள் கணவரின் கண்களைத் துடைத்துவிட்டு அனைவரையும் நெகிழச் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

By: Updated: February 17, 2020, 08:40:26 PM

மணமேடையில் மணமகன் தாலி கட்டும்போது மணமகன் கண்ணில் தூசு விழுந்ததால் சிரமம் ஏற்பட்டு கண்கலங்கியபோது மணமகள் கணவரின் கண்களைத் துடைத்துவிட்டு அனைவரையும் நெகிழச் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சமூகத்தில் ஓவ்வொருவருடைய வாழ்க்கையிலும் திருமணம் எனபது மிக முக்கியமானது. ஒரு பெண்ணுக்கு நல்ல குணநலன் கொண்ட கணவன் அமைவதும் நல்ல மனைவி அமைவதும் முக்கியமான விஷயம். அதனால்தான், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பழமொழியும் சொல்கிறார்கள். திருமணத்தில் கைப்பிடிக்கும் தம்பதிகள் மரணம் வரை இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்துக்கொண்டு வாழ்க்கைப் படகை செலுத்துகிறார்கள். அதனால், கணவன் மனைவி உறவு என்பது குடும்ப அமைப்பில் மிக முக்கியமானதாக இருக்கிறது.


அண்மையில் நடந்த ஒரு திருமணத்தில், மணமகன் தாலி கட்டும்போது எல்லோரு அட்சதை தூவ மணமகன் கண்ணில் தூசு விழுந்துவிடுகிறது. அதனால், மணமகன் கண்கலங்கி சிரமப்படும்போது, மணமகள் கணவரின் கண்களைத் துடைத்து சரி செய்கிறார். மனைவியின் அன்பில் நெகிழ்ந்துபோன, மணமகன் கண்ணில் தூசு விழுந்ததுகூட மறந்துபோய் வெட்கமும் அன்பும் வெளிப்பட சிரிக்கிறார். அவர் மட்டுமல்ல திருமணத்துக்கு வந்திருந்தவர்களும் நெகிழ்ந்துபோய் மனமகளின் அன்பைக் கண்டு புன்னகைத்தனர். இதைத்தான் உன் கண்ணில் நீர்வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி என்று பாடியிருப்பார்களோ. இந்த பாடல் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு பொருந்தும் என்பதை இந்த மணமகள் நிரூபித்திருக்கிறார்.

திருமணத்தில் அந்த நெகிழ்ச்சியான நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. வாசர்களும், மணமேடையில் நடந்த அந்த காதல் மிளிரும் வீடியோவைப் பாருங்கள்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Bride helping groom at wedding ceremony remove eye dust video viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X