தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகர், தேமாங்குளத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகள் நிஷா சுருள்வாள் மற்றும் சிலம்பம் விளையாடி அசத்தினார். மணமகனும் நிஷாவின் தற்காப்புக் கலை திறமையைப் கைதட்டிப் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகர், தேமாங்குளத்தில் திருமணம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே தற்காப்பு கலை பயின்ற மணமகள் நிஷா, பட்டுப்புடவை மாலையுடன் மணக்கோலத்தில் திருமண மண்டபத்துக்கு முன்பு இருந்த சிமெண்ட் சாலையில் கையாள்வதற்கு மிகவும் ஆபத்தான சுருள்வாளை அநாயசமாக சுழற்றினார். பிறகு, மரபான சிலம்பம் சுற்றி விளையாடினார். அதிலும் இரண்டு கைகளிலும் இரண்டு கம்புகளை வைத்துக்கொண்டு அநாயசமாக சுற்றி விளையாடி அசத்தினார். திருமணத்துக்கு வாழ்த்த வந்த கூட்டம், மணமகள் நிஷா மேளதாளத்துடன் சுருள்வாள் மற்றும் சிலம்பம் ஆடியதைப் பார்த்து அசந்துப்போனார்கள். அதே நேரத்தில் மணமகன் ராஜ்குமார் மோசஸ் மணமகள் நிஷாவின் திறமையைப் பாராட்டி கைத்தட்டி வரவேற்றார். இந்த நிகழ்வு பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.
மணமகள் நிஷாவை திருமணம் செய்துகொண்ட மணமகன் ராஜ்குமார் மோசஸ் வேறு யாருமல்ல, நிஷாவின் தாய்மாமன் தான். இந்த நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் தற்காப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்ததாக தெரிவித்தனர். மணக்கோலத்தில் மணமகள் நிஷா சுருள்வாள் மற்றும் சிலம்பம் ஆடியதை கிராம மக்கள் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததையடுத்து வைரலானது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"