Viral news : அனைத்து பெண்களுக்கும் அவர்களின் திருமண தருணம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அனைத்து வகையிலும் சிறப்பான ஒரு நிகழ்வை அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். நேரத்திற்கு மணமேடை, கோவில் / தேவாலயங்களில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைப்பார்கள்.
இங்கிலாந்தின் எக்லெஸ்டான் பகுதியில் அமைந்துள்ள புனித மேரி தேவாலயத்தில் தன்னுடைய திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தார் மணப்பெண் லிடியா ஃபெளெட்சர். கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கினால் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் தள்ளிப்போனது. இதனால் இம்முறை எந்த விதமான பிரச்சனைகளும் ஏற்படக் கூடாது என்று நினைத்தார் லிடியா. அனைவருக்கும் இந்த நினைப்பு இருப்பது சரிதானே. ஆனால், செஸ்டர் அருகே ஏ55 சாலையில் அவருடைய வண்டி, திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர்களுடன் செல்லும் போது ப்ரேக்டவுன் ஆகிவிட்டது.
அந்த சமயத்தில் அங்கே ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மாட் கெட்டேஸ், மணக்கோலத்தில் ஒரு பெண் தன்னுடைய காரின் அருகே நின்று கொண்டிருப்பதை பார்த்துவிட்டு என்னவென்று விசாரித்துள்ளார். விசயத்தை சொல்லவும் சற்றும் யோசிக்காமல் உடனே காவல்துறை வாகனத்தில் மணப்பெண்ணின் பெற்றோர்கள் உட்பட மூன்று பேருக்கும் லிஃப்ட் கொடுத்து உதவியுள்ளார் அந்த காவல்துறை அதிகாரி.
அவர்கள் மிகவும் விரைவாக காரை செலுத்தியதால் தான் நான் சற்றும் தாமதமின்றி திருமணம் நடைபெற இருந்த தேவாலயத்திற்கு சென்றேன் என்று கூறியுள்ளார் லிடியா.
காவல்துறையினர் தங்களின் வாழ்த்துகளை புதுமண தம்பதியினருக்கு தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் இந்த செயலை நெட்டிசன்கள் புழந்து தள்ளியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil