New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-62.jpg)
அண்ணன் தங்கை
அண்ணன் தங்கை
அண்ணன் தங்கை.. இந்த உறவுக்கு ஈடு இணை ஏதெேனும் உண்டா. அம்மாவைப் போல் அக்கா என்பார்கள். அப்பாவைப் போல் அண்ணன் என்பார்கள். இந்த அண்ணன் தங்கை செண்டிமேட்டை வைத்து தமிழ் சினிமாவில் வராத படங்களே இல்லை.
அப்படி வந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதற்கு காரணமே நம்ம பசங்க அண்ணன் -தங்கை உறவை அப்படி நேசிப்பது தான். ஒரு வீட்டில் தகப்பான் இல்லையென்றாலோ, அல்லது மறைந்து விட்டாலோ தனக்கு கீழ் இருக்கும் தங்கையை தகப்பன் சானத்தில் இருந்து வளர்ப்பது அண்ணன்கள் தான்.
பல குடும்பத்தில் அண்ணன் - தங்கை பாசத்தைன் கலாய்க்கும் வகையில் “ஆமா பெரிய பாசமலர் அண்ணன் தங்கச்சி” என்பார்கள். எத்தனை வருடங்கள் ஆகட்டும் அப்படியொரு அண்ணன் தங்கை பாச காவியத்தை மீண்டும் ஒருமுறை எவராலும் எடுத்திட முடியாது.
இந்த அண்ணன் தங்கை உறவு சமூகவலைத்தளங்களிலும் அடிக்கடி பேசப்படும், வீடியோக்களாகவும் பகிரப்படும். அப்படித்தான் ஏதோ ஒரு மூலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.
தனது தங்கை பந்தை சரியாக போடவில்லை என்று அழுகிறாள் என்பதை பார்த்து தாங்கிக் கொள்ள முடியாத அண்ணன், அவளை அப்படியே தூக்கி ஜெயிக்க வைக்கிறான். நான் இருக்கிறேன் என்று ஆறுதலும் கூறுகிறான். இதைத் தவிர இந்த உலகத்தில் வேறு என்ன வேண்டும்? உனக்காக நான் இருக்கிறேன் என்று கூற ஒரு உறவு இருந்தாலே அது மலைப்போல் அல்லவா!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.