ரியல் ஹீரோக்கள்! 200 பசுவை முதுகில் சுமந்து சென்று காப்பாற்றிய சகோதரர்கள்: வைரல் வீடியோ

மலைப்பாங்கான இமாச்சலப் பிரதேசப் பகுதியில், இரு சகோதரர்கள் தங்களின் 200 கிலோ எடையுள்ள பசுவை, அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இரு சகோதரர்கள் தங்கள் முதுகில் சுமந்து சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலைப்பாங்கான இமாச்சலப் பிரதேசப் பகுதியில், இரு சகோதரர்கள் தங்களின் 200 கிலோ எடையுள்ள பசுவை, அதன் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இரு சகோதரர்கள் தங்கள் முதுகில் சுமந்து சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
cow rescue

இமாச்சலப் பிரதேசத்தில் பசுவை முதுகில் சுமந்து சென்ற சகோதரர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள கியாரி என்ற தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள பசுவை, சுமார் 3 கி.மீ தூரம் வரை, கரடுமுரடான மற்றும் வழுக்கும் மலைப்பாதைகளில் நடந்தே சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இந்த வீடியோவை ‘ஸ்ட்ரீட் டாக்ஸ் ஆஃப் பாம்பே’ (streetdogsofbombay) என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. அதில், "இரண்டு சகோதரர்கள். ஒரு நோய்வாய்ப்பட்ட பசு. வழுக்கும் மற்றும் செங்குத்தான மலைப்பாதையில் 3 கி.மீ பயணம்... அவர்கள் உதவிக்காகக் காத்திருக்கவில்லை, புகார் செய்யவில்லை. அன்பு மற்றும் இரக்கம் சொன்னதைச் செய்தனர், அதன் உயிரையும் காப்பாற்றினர். இதுதான் மனிதநேயம். இவர்களுக்கு மரியாதை செலுத்துவோம்” என்று நெகிழ்ச்சியான ஒரு பதிவுடன் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

வீடியோவில், அந்தச் சகோதரர்கள் கயிற்றைப் பயன்படுத்தி அந்தப் பெரிய பசுவை தங்கள் முதுகில் கட்டிக்கொண்டு, ஆபத்தான பாதையில் செல்வது தெரிகிறது. இந்தச் செயல் மிகவும் களைப்பைத் தருவதாக இருந்தாலும், பசுவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற அவர்களின் உறுதியைக் காணும்போது, நெஞ்சை உருகச் செய்கிறது.

Advertisment
Advertisements

வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணைய பயனர்கள் பலரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி கருத்து தெரிவித்தனர். ஒருவர், "ஒருவரின் இதயத்தை, அவர் விலங்குகளை நடத்தும் விதத்தில் இருந்து அறியலாம்" என்று எழுதியுள்ளார். 

மற்றொருவர், "வீடியோ வைரலாகிறது, ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதே செல்போன் மூலம் ஏதேனும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டிருக்கலாம்" என்று வீடியோ எடுத்தவர்களை விமர்சித்துள்ளார்.

மூன்றாமவர், "ஒரு பக்கம் விலங்குகளை சுடுபவர்கள், கொல்பவர்கள், விரட்டுபவர்கள், மிதிப்பவர்கள், அவற்றின் உணவு பாத்திரங்களை உடைப்பவர்கள் இருக்கும்போது, இது மிகவும் அசாதாரணமான செயல். இவர்களை தேசிய செய்திகளில் பிரபலப்படுத்தி, விலங்குகளிடம் கொடூரமாக நடந்துகொள்ளும் டெல்லி, நொய்டா, உ.பி. போன்ற பகுதிகளுக்கு எடுத்துக் காட்டாகச் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நான்காவது நபர், "நாம் யாரை 'உண்மையான ஹீரோக்கள்' என்று அழைக்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: