Advertisment

ராஜஸ்தானில் 46 டிகிரியில் வெயில் வெப்பம்... மணலில் அப்பளம் சுட்ட ராணுவ வீரர்: வைரல் வீடியோ

ராஜஸ்தானின் பிகானேரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஜவான் ஒருவர் அப்பளத்தை மணலால் மூடி வறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
jawan

ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் 46 டிகிரி வெயில் வெப்பத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ராஜஸ்தானின் பிகானேர் பகுதியில் 46 டிகிரி வெயில் வெப்பத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர்  மணலில் அப்பளம் சுட்டு கைகளில் நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Watch: BSF jawan roasts papad in sand as Rajasthan’s Bikaner sizzles at 46 degrees

வடமேற்கு இந்தியாவை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், ராஜஸ்தானின் பிகானேரில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஜவான் ஒருவர் அப்பளத்தை மணலால் மூடி வறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானின் வெப்பமான நகரங்களில் ஒன்று பிகானேர். இந்த ஆண்டு வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது.

ஃபிரண்டல் ஃபோர்ஸ் (@FrontalForce) என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில், சீருடையில் இருக்கும் எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) வீரர் ஒருவர், முகத்தை மூடிக்கொண்டு, துப்பாக்கியை பிடித்துக்கொண்டு மணலுக்கு அடியில் ஒரு அப்பளத்தை மூடி வைக்கிறார். அவர் சில வினாடிகள் காத்திருந்து, மணலை அகற்றி  வெயிலின் வெப்பத்தில் வறுந்த அப்பளத்தை எடுத்து துண்டுகளாக உடைக்கிறார். இதன் மூலம், கடுமையான வெயிலின் வெப்பம் இருந்தபோதிலும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோ குறித்து “எங்கள் ஜவான்களுக்கு சல்யூட். பி.எஸ்.எஃப் ஜவான் ராஜஸ்தானின் பிகானேரில் மணலில் ஒரு அப்பளத்தை வறுத்தெடுத்தார், எல்லையில் தாய்நாட்டிற்கு சேவை செய்கிறார்” அந்த எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். கடுமையான வெயிலின் வெப்பத்திலும் பணிபுரிந்ததற்காக பி.எஸ்.எஃப் ஜவானை வாழ்த்துவதற்காக சமூக ஊடக பயனர்கள் கூடியதால், வீடியோ பல எதிர்வினைகளைக் குவித்தது. 

இதற்கு பதிலளித்த ஒரு பயனர், “ராஜஸ்தானின் மேற்குப் பகுதியான கங்காநகர், பிகானேர், ஜெய்சால்மர், பார்மர் ஆகிய பகுதிகள் பி.எஸ்.எஃப்-ஆல் பாதுகாக்கப்படும் வெப்பமான மற்றும் கடினமான பகுதிகளில் ஒன்று. வானிலை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலப்பரப்பு மிகவும் கடினமானது. பி.எஸ்.எஃப் பாலைவனத்தின் காவலாளியாக உள்ளது. 

மற்றொரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில்,  “இத்தகைய கடுமையான சூழ்நிலையில் நிற்கும் இவர்களின் நிலை மிகவும் கடினமானது, ஜவானுக்கு சல்யூட்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் மே 25 வரை வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வெப்ப அலை நிலைமைகளை கணித்துள்ளது. ஜோத்பூர் மற்றும் பிகானருக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது, அதே நேரத்தில் பிலானி அடுத்த 28 மணி நேரத்தில் 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment