”பட்ஜெட்டா இது?”: பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை கலாய்த்து வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். நடுத்தர குடும்பங்கள் மற்றும் சம்பளதாரர்களுக்கு பலனளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனிநபருக்கான வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் அறிவித்தார். வரி வரம்பில் உள்ள தனிநபர்கள் மருத்துவ செலவினங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் கீழ் ரூ.40,000 வரை வரி கழிவு கோர முடியும் என்று நிதியமைச்சர் அறிவித்ததும், வருமான வரி தாக்கல் செய்வோரை உற்சாகப்படுத்தும் அறிவிப்பாக இல்லை என கருதப்படுகிறது. முதியோர் மருத்துவ காப்பீட்டு கழிவு வரம்பு ரூ.30,000-ல் இருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

”இந்த பட்ஜெட் யாரையும் திருப்திப்படுத்தாத பட்ஜெட்டாக உள்ளது”, என இந்தியன் எக்ஸ்பிரஸின் பொருளாதார நிபுணர் ஹரிஷ் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கியவுடனேயே நெட்டிசன்கள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பட்ஜெட்டை கேலி செய்யத் துவங்கிவிட்டனர். அவற்றில், நம்மை சிரிக்க வைக்கும் சில பதிவுகள் இதோ:

×Close
×Close