ஆட்டம் காண வைத்த மத்திய அரசின் பட்ஜெட்: மீம்ஸ்களால் பதில் சொல்லும் நெட்டிசன்கள்!

மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

budget memes
budget memes

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்,  நேற்று  இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்த பேச்சு தான் இணையத்தில் களைக்கட்டி வருகிறது.

2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட்து..மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட கடைசி பட்ஜெட் என்பதால்,இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

வரும் மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் பாஜக அரசு இந்த முறை பட்ஜெட்டை மிகவும் நுணுக்கமாக கையாளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லி வைத்தது போல் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாத ஊழியர்களுக்கு ஜாக்பாட் என்பது போல் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது.

மேலும், ஆண்டு வருமானம் ரூ. 6.5 லட்சமாக உள்ளவர்கள் ரூ. 1.5 லட்சத்தை குறிப்பிட்ட சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை போன்ற திட்டங்கள் பொதுமக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இது தேர்தலுக்கான பட்ஜெட் என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனே மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

சம்பவம் சம்பவம்-ன்னு சொல்லி கேட்டு இருப்பீங்க.. ஆனால் அத நேரல பார்த்து இருக்கீங்களா? இங்க பாருங்க.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Budget2019 dominates online trends people cheer tax breaks with memes

Next Story
இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? கல்யாணத்துக்கு மாப்பிளை ரோட் ரோலரிலா வருவது!மாப்பிளை அழைப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com