சிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம்... விரட்டுறது யாருன்னு பாருங்க!

வீரத்துக்கு உருவகமாக கூறப்படுகிற சிங்கம் எல்லா நேரத்திலும் வீரமாக தைரியத்துடன் இருப்பதில்லை. சில நேரங்களில் சிங்கம் மிகவும் சாதுவான விலங்குகளிடம்கூட புறமுதுகிட்டு ஓடும். அப்படி ஒரு சிங்கம் புறமுதுகிட்டு ஓடுவதையும் பின்னால் ஓட ஓட விரட்டுவதை யார் என்றும் இந்த வைரல் வீடியோவில் பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
When lion looses its pride, viral vieo, gir forest, buffalo chasing lion viral video, சிங்கத்தை விரட்டிய காட்டெருமை, சிங்கம், எருமை, வைரல் வீடியோ, tamil viral news, tamil viral video news, latest tamil viral news, lion looses pride

Advertisment

பொதுவாக வீரத்துக்கும் தைரியத்துக்கும் உருவகமாக சிங்கம் கூறப்படுகிறது. வன விலங்குகளில் வேட்டையாடுவதில் மிகவும் வலிமையான விலங்கு சிங்கம். அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா என்று கூறுவர்.

அப்படி வீரமாக இருக்கிற வேட்டை விலங்கான சிங்கம், எல்லா நேரத்திலும் வீரத்துடன் தைரியமாக மற்ற விலங்குகளை எதிர்கொள்வதில்லை. சில நேரம், யானை, கழுதைப்புலி கூட்டங்கள், புலி போன்ற விலங்குகளிடம் மோதும்போது வெற்றிகொள்ள முடியாமல் பின்வாங்குவதும் ஓடிவிடுவதும் உண்டு. ஆனால், அந்த விலங்குகள் சிங்கத்தை ஓட ஓட விரட்டிய சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று வீடியோ பதிவுகள் இல்லை. ஆனால், மிகவும் மந்தமான காட்டு எருமை ஒன்று சிங்கத்தை ஓட ஓட விரட்டி பயத்தைக் காட்டியிருக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment
Advertisements

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், சிங்கம் உயிர் பயத்துடன் வேகமாக ஓட பின்னால் ஒரு காட்டெருமை வேகமாக ஓட ஓட விரட்டுகிறது. சிங்கம் வேகமாக ஓடி காட்டுக்குள் மறைகிறது. எருமைக்கு பின்னாடி ஒரு பாதுகாவலர் ஓடி அந்த எருமையை அழைத்து வருகிறார். காட்டெருமை ஓடிய வேகத்தைப் பார்க்கும்போது சிங்கம் சிக்கியிருந்தால் சின்னாபின்னமாகியிருக்கும் போல தெரிகிறது.

இந்த வீடியோ குறித்து, சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், சிங்கம் அதன் பெருமையை இழந்த தருணம். கீர் காடுகளில் ஒரு காட்டெருமை சிங்கத்தை துரத்திய சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில் சிங்கம் தன் பெருமையை இழந்த தருணம்தான் சந்தேகமேயில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Video Viral Social Media Viral Wildlife

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: