/indian-express-tamil/media/media_files/2025/08/13/bull-strolls-2025-08-13-22-54-42.jpg)
மருத்துவமனைக்குள் புகுந்த மாடு! காகிதங்களைச் சாப்பிட்டுவிட்டு ஊழியர்களைத் தேடிய சுவாரஸ்யம்!
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் விநோதமான நடந்த சம்பவம், மருத்துவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களுக்கே தலைசுற்ற வைத்திருக்கிறது. ஒரு காளை மாடு, சகஜமாக மருத்துவமனைக்குள் நுழைந்து, நேரடியாக மருத்துவரின் அறைக்குள் சென்று, 'இனி நான் தான் டாக்டர்' என்பதுபோல் நாற்காலிக்கு அருகே நின்று அசை போட்டுள்ளது.
அந்த காளை, நாற்காலிக்கு அருகில் சென்று மேசை மேல் இருந்த பேப்பர்களை மெதுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இது எந்த நோய்க்கான மாத்திரை, எந்த நோய்க்கு எத்தனை மாத்திரை என ஆராய்ந்தது போல இருந்தது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்தவர், "பாருங்கள் எங்கள் மருத்துவமனையின் தரத்தை, மாடு கூட எந்த பயமும் இல்லாமல் உள்ளே சுற்றுகிறது" என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த மாடு ஒருவேளை, மருத்துவர் இல்லாத நேரத்தில் அவசரமாகச் சிகிச்சைக்கு வந்த நோயாளிபோல இருக்கக்கூடும் என்றும் சிலர் கிண்டலடிக்கிறார்கள்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, "சுகாதார கண்காட்சியை பார்க்க வந்த முதலமைச்சருக்கு, மருத்துவர் இல்லை. 'டாக்டர் எப்போது வருவார்?' என்று கேட்டதற்கு, 'அரசு மாறினால்தான் டாக்டர் வருவார் போல' எனப் பதில் வந்தது" என்று கேலியாகப் பதிவிட்டுள்ளார். ஒருவேளை, அந்த மாடு நோயாளியின் சார்பாக அரசுக்கு ஒரு கடிதம் எழுத வந்ததோ என்னவோ?
मुख्यमंत्री आरोग्य मेले का औचक निरीक्षण करने पहुँचा चौपाया लेकिन पता चला कि डॉक्टर ही नहीं आया।
— Akhilesh Yadav (@yadavakhilesh) August 11, 2025
किसी ने पूछा ‘भइया डॉक्टर कब आएगा?’
तो किसी ने जवाब दिया, ‘लगता है अब जब सरकार बदलेगी डॉक्टर तभी आएगा।’ pic.twitter.com/Koe3EmE3Ui
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகியுள்ளது. ஒருவர், "டிஜிட்டல் இந்தியாவுக்குப் பிறகு, இப்போது டிஜிட்டல் டாக்டர்" என்று கலாய்க்க, இன்னொருவர், "அடடா! ரொம்ப நாளாச்சு இந்த 'மாடு செய்தி' கேட்டு. வயிறு குலுங்க சிரிக்க வைத்தது" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருத்துவமனை சம்பவத்துக்கு மாவட்ட சுகாதாரத் துறை இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. பஹ்ரைச் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரிக்கு இந்தச் சம்பவம் குறித்துத் தெரிந்தும், அவர் பொதுவெளியில் பேசவோ அல்லது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. இந்த மாத தொடக்கத்தில், பரேலியில் 2 காளை மாடுகள் மருத்துவமனைக்கு அருகில் சண்டையிட்டு, ஒரு டீக்கடையை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.