New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/02/shimla-bulldozer-accident-2025-08-02-22-50-37.jpg)
300 மீ. பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த புல்டோசர்... இமாச்சலில் கனமழை கோரத் தாண்டவம்!
இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில், சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புல்டோசர் கட்டுப்பாட்டை இழந்து மலையிலிருந்து உருண்டு விழுந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அருகிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
300 மீ. பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த புல்டோசர்... இமாச்சலில் கனமழை கோரத் தாண்டவம்!
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கொடூரமான கனமழை, உயிரிழப்புகளையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த புல்டோசர் ஒன்று மலையில் உருண்டு விழுந்து, ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தக் கோரக் காட்சியைக் கண்டோர் திகைத்து உறைந்தனர்.
शिमला में 300 फीट नीचे गिरी JCB
— Loveleen kaur (@loveleenchanni) August 2, 2025
शिमला के कुमारसैन में सड़क खोलते समय 300 फीट नीचे खाई में जा गिरा JCB, हादसे में चालक गंभीर रुप से घायल हुआ है#shimla #jcb #viralvideo pic.twitter.com/zBEigY4M4u
ஜப்லி தேசிய நெடுஞ்சாலை 5-ல் அடைபட்டிருந்த சாலையைத் திறக்கும் முயற்சியில் JCB இயந்திரம் ஈடுபட்டிருந்தது. திடீரென மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழ, புல்டோசர் கட்டுப்பாட்டை இழந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் 300 மீ. ஆழமான பள்ளத்தில் தலைகுப்புற விழுந்தது. விபத்து நடந்தவுடன், தைரியமிக்க ஒருவர், நிலச்சரிவால் சூழப்பட்ட அந்த அபாயகரமான பகுதிக்குள் கயிறுகட்டி இறங்கி, புல்டோசர் ஓட்டுநரை மீட்க பெரும் போராட்டம் நடத்தினார். ஆனால், படுகாயமடைந்த ஓட்டுநர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக NDTV செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த புல்டோசர் விபத்து, கடந்த சில வாரங்களாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் கனமழை உலுக்கி வரும் கொடூரப் பக்கங்களில் ஒன்றுதான். வெள்ளம், நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்ட பெரும் அடைப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (SDMA) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை அளிக்கின்றன. ஜூன் 20 முதல் ஆக.2 வரை பெய்த கனமழையால் மட்டும் மொத்தம் 179 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 101 பேர் நேரடியாக மழை தொடர்பான பேரிடர்களான நிலச்சரிவு, திடீர் வெள்ளம், மின்னல் தாக்கம் போன்றவற்றால் பலியாகியுள்ளனர். மீதமுள்ள 78 பேர், மோசமான வானிலை மற்றும் சேதமடைந்த சாலைகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் சாலைகள், மின் விநியோகம், குடிநீர் வசதிகள் என அனைத்து அடிப்படை கட்டமைப்புகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, 403 சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன, 411 மின் விநியோக டிரான்ஸ்பார்மர்கள் செயலிழந்துள்ளன, மற்றும் 196 குடிநீர் விநியோக திட்டங்கள் முற்றிலும் தடைபட்டுள்ளன. மழை ஒருபுறம் உயிர்களைப் பறிக்க, மறுபுறம் பேரழிவை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.