Advertisment

டிரைவர் போட்ட ஒரே பிரேக்.. ஒட்டுமொத்த மாணவர்களும் தரையில்!இப்படி ஒரு பஸ் டே கொண்டாட்டம் தேவையா?

முன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bus day celebration video

Bus day celebration video

Bus day celebration video : சென்னையில் மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்திருக்கிறது பஸ் டே கொண்டாட்டங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக கொண்டாடும் "பஸ் டே'க்கு தடை விதிக்கும் படி அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர்.

Advertisment

கொண்டாட்டங்கள் அடிதடி வரை செல்வது பஸ் டேவில் வழக்கமாகி போனது. போலீசார்கள் பலமுறை கண்டித்தும் மாணவர்கள் அதனை மீறி அவ்வப்போது பஸ் டே கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னையில் பஸ் டேக்கு சென்னை உயர்நீதிமன்றம் முழுவதுமாக தடை விதித்தது.

போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோர் பஸ்டே நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுமக்களுக்கு பஸ்டே நிகழ்ச்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பஸ்டே சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதும் ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவது குறித்து சென்னை காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம், சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி , நியூ கல்லூரி, பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மற்றும் நியூ கல்லூரி மாணவர்கள் முக்கிய சாலைகளில் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஆவடியிலிருந்து அண்ணா சதுக்கம் செல்லக்கூடிய 40A என்ற பேருந்தின் கூரை மீது ஏறி ஆபத்தான முறையில் நின்றுகொண்டு விசில் அடித்தப்படி பஸ் டே கொண்டாடினர்.

அப்போது டிரைவர் திடீரென்று பிரேக் போட கூரையில் நின்றப்படியே வந்த மாணவர் கூட்டம் ஒட்டு மொத்தமாக பொத்தென்று ரோட்டில் விழுந்தனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் ஒருபுறம் இருக்க ஆபத்து அறியாமல் மாணவர்கள் இப்படி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டது வீடியோ பார்த்தவர்களை பதற வைத்துள்ளது. பேருந்து மேற்கூரையின் முன்புறம் இருந்த மாணவர்கள் கீழே விழுந்து அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஓடும் பேருந்திலிருந்து அதன் முன்புறம் விழுந்த அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னையில் நேற்று மட்டும் 'பஸ் டே' கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment