முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பால்வளத் துறை அமைச்சர் ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதே போல, டி.ஆர்.பி. ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு, மாற்றப்பட்ட இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் சாமிநாதனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
நிதித் துறை மற்றும் மனிதவள மேம்பாடு துறை தங்கம் தென்னரசுவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. புதியதாக அமைச்சராக பதவியேற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை அளிக்கப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மற்றும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆடியோ வெளியிட்டு சர்ச்சையான நிலையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டிருப்பது நெட்டிசன்களின் எதிர்வினையை ஈர்த்துள்ளது.
நாகரீக கோமாளி என்ற பெயரில் உள்ள ஒரு பயனர், “அமைச்சர்கள் இலாகா மாற்றம், இப்போ எப்படியும் நிறைய கருத்துக்கள் வரும் நம்ம அழகா உட்காந்து வேடிக்கை பார்ப்போம். கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. ரத்தக்களரி ஆகட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
மழவர் தேசம் பென்னாகரத்தான் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “செயல்படாத அமைச்சர்கள் மாற்றம்… அப்ப முதலமைச்சரை தானே முதல்ல மாத்தனும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பயனர், “சரிவர பணி செய்யாத அமைச்சர்கள் இலாகா மாற்றம், டேய் அப்படிப் பார்த்தா முதல்ல முதலமைச்சரத்தான் மாத்தி உட்கார வைக்கணும்” என்று மீம்ஸ் போட்டுள்ளார்.
வெற்றிமாறன் என்ற பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் பயனர், “அமைச்சர்கள் இலாக்கா மாற்றம்னு சொன்னா எதுக்கு இப்படி உண்டுட்டு இருக்காங்க? எப்படி இருந்தாலும் இங்க ஒரே பாலிசிப்படிதான் ஆட்சி நடக்கப் போகுது, நிர்வாகம் நடக்கப் போகுது. ரொம்ப வொர்ட்றா” என்று பதிலளித்துள்ளார்.
கவி என்ற பெயரில் உள்ள ஒரு பயனர், “அமைச்சரவை மாற்றம் ஏன் முதலமைச்சர் விளக்கம்… நிர்வாகக் காரணங்களுக்காக மட்டுமே தமிழக அமைச்சரவை மாற்றம் என்று ஸ்டாலின் தெரிவித்ததாகவும் அதற்கு மக்கள் சிரிப்பதாகவும்” மீம்ஸ் பதிவிட்டுள்ளார்.
மக்கத் அப்பாஸ் என்ற ட்விட்டர் பயனர், “தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அமைச்சருக்கும் கிடைத்திடாத சிறப்பு மிக்க இடம் பி.டி.ஆர்-க்கு மக்கள் மனதில் கிடைத்துள்ளது.
பொதுவாக அமைச்சரவை மாற்றத்தை just like that னு கடந்து செல்லும் மக்களுக்கு மத்தியில் பி.டி.ஆர் துறை மாற்றத்தை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் இதுதான் பி.டி.ஆர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு, வீரமணி இராசகோபால் என்ற பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் பயனர், “எல்லா அமைச்சர்களுமே பி.டி.ஆர்-கள்தான் என்பதை அறிந்தவர் முதல்வர். அமைச்சரவை மாற்றம் இயல்பான நடவடிக்கைகளில் ஒன்றுதான். இதை வேறு எந்த கோணத்திலும் மாற்ற முனைவார்கள் எதிரி கட்சியினர்” என்று பதிலளித்துள்ளார்.
பரம்ஸ் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அமைச்சரவையை மாற்றினார். 2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 23 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. இருக்கிற அமைச்சர்களை மாற்றினால்தான் அமைச்சராவோம் என கணக்கில் ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருந்தது. அதனால்தான், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் முன்னேற்றம் இருந்தாலும் வளர்ச்சி என்பதே இல்லை . கலைஞர் அப்படியல்ல ஒரு அமைச்சரை தொடர்ந்து அப்பதவியில் வைத்திருந்தால் தான் அவர் அத்துறையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு சாதிப்பார் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப்பட்ட உரிமை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றம் குறித்து நெட்டிசன்கள் ரியாக்ஷன்கள்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“