/indian-express-tamil/media/media_files/2025/10/13/california-helicopter-crash-2-2025-10-13-06-54-15.jpg)
கலிஃபோர்னியா ஹெலிகாப்டர் விபத்து: ஹண்டிங்டன் கடற்கரையில் ஹோட்டலுக்கு அருகே காற்றில் சுழன்று விழுந்த ஹெலிகாப்டர். Photograph: (Image/ @HumanDilemma_)
கலிஃபோர்னியாவில், ஹண்டிங்டன் கடற்கரையில் கார் மற்றும் ஹெலிகாப்டர் கண்காட்சியின்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹண்டிங்டன் கடற்கரை மற்றும் ஹயாட் ஹோட்டலுக்கு மிக அருகில், மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் இந்த விபத்து நடந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
சனிக்கிழமை (அக்டோபர் 11, 2025) பிற்பகல் 2 மணியளவில், பசிபிக் கடலோர நெடுஞ்சாலையின் சந்திப்பு அருகே நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், ஹெலிகாப்டர் காற்றில் வேகமாகச் சுழன்று, கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து நொறுங்கியது.
#BREAKING: Helicopter crashes into palm trees during Huntington Beach's "Cars & Copters" event, 5 injured, no fatalities. MCI declared; NTSB investigating possible mechanical failure. pic.twitter.com/q9Vad0I2vJ
— Human Dilemma (@HumanDilemma_) October 11, 2025
இந்த விபத்தின்போது எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன. ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சிக்கும்போது சுழன்று விழுந்த காட்சி, பார்வையாளர்களை உலுக்கியுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த இருவர் மீட்கப்பட்டனர். கூடுதலாக, அங்கே நடந்து சென்ற 3 பேர் உள்பட மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து நடந்த இடம், பிரபலமான கடற்கரை மற்றும் ஹோட்டலில் இருந்து மிக அருகில் இருந்ததை வரைபடங்கள் உறுதிப்படுத்துகின்றன.
விபத்தைத் தொடர்ந்து, ஹண்டிங்டன் கடற்கரைக் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். விசாரணையின் பொருட்டு, முக்கியச் சாலையான பசிபிக் கடலோர நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.