விலங்கு ஆர்வலரை பாய்ந்து தாக்கும் மலைப் பாம்பு: ஷாக் வீடியோ

California zookeeper attacked by Python video reactions Tamil News பல நெட்டிசன்கள் பயந்தாலும், மற்றவர்கள் பாம்புகளைக் கையாளும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு ப்ரூவரை வலியுறுத்தினர்.

California zookeeper attacked by Python video reactions Tamil News
California zookeeper attacked by Python video reactions Tamil News

California zookeeper attacked by Python video reactions Tamil News : கலிபோர்னியாவைச் சேர்ந்த மிருகக்காட்சி காவலர் ஜெய் ப்ரூவர், பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற ஆபத்தான ஊர்வனவற்றின் வீடியோக்களைப் பின்தொடர்பவர்களை அவ்வப்போது அதிர்ச்சியடையச் செய்து வருகிறார். தன்னுடைய சமீபத்திய பதிவில், இந்த ஊர்வன உயிரியல் பூங்காவின் நிறுவனர், ஒரு மலைப்பாம்பு அவரைத் தாக்குவதைப்போல பதிவிட்டு இரண்டு முறை வெளியிட்டிருக்கிறார்.

“இந்த பெரிய பல வண்ணங்களாலான பெண் பாம்பு, சிறந்த பாம்பு அல்ல. அதனுடைய முட்டைகளுக்கு உதவ முயற்சி செய்யுங்கள்” என்று ப்ரூவர் நகைச்சுவையான கேப்ஷனோடு, @jayprehistoricpets என்கிற தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த குறுகிய காணொளியில், உயிரியல் பராமரிப்பாளர் மேஜையின் மேல் வைக்கப்பட்டுள்ள சாம்பல் நிற மலைப்பாம்பின் அருகில் அவர் நிற்பதுபோல் காணப்படுகிறது. இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு, பாம்பு அங்கிருந்த பராமரிப்பாளரைத் தாக்கியது.

4.4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட இந்த வீடியோ, வைரலாக அதிக நேரம் எடுக்கவில்லை. இந்த போஸ்ட் விரைவில் பல ரியாக்ஷன்களால் நிரம்பியது. பல நெட்டிசன்கள் பயந்தாலும், மற்றவர்கள் பாம்புகளைக் கையாளும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு ப்ரூவரை வலியுறுத்தினர்.

இருப்பினும், இந்த மிருகக்காட்சி அதிகாரி பாம்புகளுடன் நெருங்கிய சந்திப்பு வீடியோக்களை வெளியிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக, ப்ரூவர் தனது தோள்களில் 113 கிலோ பாம்பை எடுத்துச் செல்லும் வீடியோ நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “22 அடி, 250 எல்பி பாம்பை நகர்த்த யாரும் உதவி செய்யாதபோது, அதை நாமே பழைய ஃபேஷன் வழியில் செய்யவேண்டியதுதான்” என்று ப்ரூவர் அந்த காணொளியைப் பகிரும்போது எழுதியிருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: California zookeeper attacked by python video reactions tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com