scorecardresearch

முதுமலையில் ஜாலியாக ஆற்றில் குளியல் போடும் யானைகள்: வீடியோ

viral video: முதுமலையில் உள்ள முகாம் யானைகள் மோயாறில் ஜாலியாக குளியல் போடும் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Mudumalai Elephants, Mudumalai Elephants, take bath, Camp Elephants take Bath in Moyar river, முதுமலையில் ஜாலியாக ஆற்றில் குளியல் போடும் யானைகள், வைரல் வீடியோ, Camp elephants take bath in beautiful Moyar River
முதுமலையில் ஜாலியாக ஆற்றில் குளியல் போடும் யானைகள்

viral video: முதுமலையில் உள்ள முகாம் யானைகள் மோயாறில் ஜாலியாக குளியல் போடும் வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

முதுமலை யானைகள் முகாம் தமிழ்நாட்டிலுள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும் தெம்பு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஏற்பாடு. முகாமில் உள்ள யானைகள் பராமரிக்கப்பட்டு திரும்ப அனுப்பப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் காடுகள் துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு வனவிலங்குகள் வீடியோ, வனவிலங்குகள் விழிப்புணர்வு வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், முதுமலையில் உள்ள முகாம் யானைகள் மோயாறில் ஜாலியாக குளியல் போடும் வீடியோ சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “முதுமலையில் உள்ள அழகிய மோயார் ஆற்றில் முகாம் யானைகள் குளித்தன. ஒரு பாகன் தனது யானையுடன் நெருக்காமாக இருப்பதற்கான இதுவே சிறந்த நேரம். இது உண்மையில் குளிக்கும் நேரத்தின் மீதான விருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ள மற்றொரு வீடியொவில், லேசாக மழை பெய்துகொண்டிருக்கும்போது பாகன் யானை மீது அமர்ந்து குடைபிடித்துக்கொண்டு செல்லும் அழகான காட்சி பதிவாகி உள்ளது.

இந்த வீடியோவும் பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்து வருகிறது.

அதே போல, உலக சிறுத்தைகள் நாளில் சுப்ரியா சாஹு பகிர்ந்துள்ள மற்றொரு வீடியோவில், ஒரு கருஞ்சிறுத்தை செங்குத்தான மரத்தில் வேகமாக ஏறுகிறது. மேலே ஏற்கெனவே, ஒரு சிறுத்தைப் புலி அமர்ந்திருக்கிறது. சிறுத்தை எதிர்ப்பு தெரிவித்ததும், கருஞ்சிறுத்தை கீழே இறங்கிவிடுகிறது. இந்த வீடியோவும் பார்வையாளர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Camp elephants take bath in beautiful moyar river in mudumalai video goes viral