இந்த ஓவியத்தில் இருக்கும் 25 விலங்குகளை நீங்கள் 75 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உறுதியாக சொன்னால் உலக மக்கள் தொகையில் 0.1 % மட்டுமே இதை சரியாக கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்கள், நமது மூளையை வேகமாக வேலை செய்ய வைக்கிறது. பார்ப்பதற்கு இது உதவாத விளையாட்டு என்று தெரிந்தாலும், ஒரு வித போட்டி மனப்பான்மையை நமது மனதிற்குள் தூண்டி விடுகிறது.. மற்றவர்களுடன் நடத்தப்படும் போட்டியில் இல்லை இது. நமது மனத்திற்கே நாம் நடத்தும் போட்டி. நமது ஆழ் மன எண்ணங்கள் பற்றியும், நம்மைப் பற்றி நமக்கே தெரியாத விஷயங்களையும் நாம் கண்டுகொள்ள உதவுகிறது.
தற்போது நீங்கள் பார்க்கும் ஓவியத்தில் ஒரு மனிதனின் தலை இருக்கிறது. 16ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியர் க்யூசெப்பே அரிசிம்போல்டோ வரைந்துள்ளார். இவர் இத்தாலியைச் சேர்ந்தவர். இவர் மனிதர்களின் தலைகளை, உணவு பொருட்களை வைத்து ஓவியங்களாக உருவாக்குவதில் வல்லுநர் என்றே சொல்லலாம்.
இந்த ஓவியத்தில் யானை, குதிரை, மயில், கரடி, புலி, சிறுத்தை, நரி, முயல், பருந்து, ஆமை ஆகியவை இருக்கிறது. இந்த ஓவியத்தை 1 நிமிடம் 15 நொடிகள் வரை பார்க்க வேண்டும். அதற்குள் நீங்கள் 25 விலங்களை பட்டியலிட வேண்டும். அப்படி செய்தால் 0.1 % நீங்களும் சேர்ந்துவிடுவீர்கள். முயற்சி செய்து பாருங்க.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“