puzzle video : வைரல் வீடியோக்களில் வன உயிரினங்கள் குறித்து அறிய தகவல்களை அறிந்து கொள்ள மீண்டும் உங்களை வரவேற்கின்றோம். இன்று உங்களின் மூளைக்கு வேலை தரும் வகையில் ஒரு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் ஒரு உயிரினம் உள்ளது. அந்த உயிரினம் எங்கே உள்ளது என்பதையும், அது என்ன உயிரினம் என்பதையும் உங்களால் இன்று கண்டுபிடிக்க முடிந்தால் நீங்கள் தான் ஜீனியஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ப்ரோன்க்ஸ் மிருக காட்சி சாலையின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் மலையன் ஜங்கிள் நிம்ப்ஸ், மற்றும் வியட்நாமிஸ் வாக்கிங் ஸ்டிக்ஸ் மற்றும் ஜெயிண்ட் வாக்கிங்ஸ்டிக்ஸ் பூச்சியினங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இயற்கை மிகவும் அதிசயமும் அற்புதமும் நிறைந்தது என்பதில் மாற்றுக் கருத்துகள் ஏதும் இல்லை. தங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் சூழல் வரும் போது, தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும் உயிரின தகவமைப்பை ஆங்கிலத்தில் Camouflage என்று வழங்குகிறோம். இந்த உயிரினங்கள் அனைத்தும் தங்களை ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள இடத்திற்கு தகுந்தாற் போல் உள்ளது. அதனால் இந்த உயிரினங்களை கண்டுபிடிப்பது சிரமம் தான். ஒரு வேளை நீங்கள் கண்டுபிடித்தால் உங்களுக்கு ஒரே பலே சொல்லிக் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil