Viral Video: காதல் எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொதுவான உணர்வாக இருக்கிறது. காதலே இந்த உலகத்தை பாதுகாக்கிறது. காதலே மனிதர்களை மேம்படுத்துகிறது. காதல் எல்லா உயிரினங்களுக்கும் உன்னதமானதாக இருக்கிறது. விலங்குகள், பறவைகள், மனிதர்கள் அனைவருமே காதலால் வாழ்கிறார்கள். அன்புதான் எல்லா உயிரினங்களையும் இணைக்கிறது. அன்புதான், எல்லாவற்றையும் ஆள்கிறது.
இந்த காதலர் தினத்தில் ஒரு பறவையின் காதல் கதை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அது ஒரு ஹார்ன்பில் பறவையின் காதல். கூட்டில் இருக்கும் தனது துணைக்கு இரையை ஊட்டும் அழகான காதல் காட்சி அது. இதைப் பார்க்கும்போது, இதைவிட ஒரு அழகான ‘லவ் ஸ்டோரி’ உங்களால் சொல்ல முடியுமா என்றே கேட்கத் தோன்றுகிறது.
ஹார்ன் பில் பறவை மரப் பொந்தில் இருக்கும் தனது துணைக்கு இரையையும் ஊட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஹார்ன் பில் பறவையின் காதல் இதயத்தை நெகிழச் செய்கிறது. இந்த வீடியோவை, ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பர்வீன் கஸ்வான் இந்த வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “இதை விட அழகான காதல் கதையை எனக்கு காட்டுங்கள். ஒரு ஆண் ஹார்ன்பில் பறவை, கூட்டில் குஞ்சுகளை வளர்ப்பதற்காக கூட்டில் தன்னைப் பூட்டிக்கொண்ட பெண் பறவைக்கு உணவளிக்கிறது. இதை அந்த ஆண் பறவை சில மாதங்களுக்கு தினமும் செய்யும்.
இது சரியான ஜோடி பறவைகள். காடுகளின் தோட்டக்காரர் என்றும் அழைக்கப்படும் ஹார்ன்பில்களைப் பற்றிய கதை எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
இந்தியாவில் 9 வகையான ஹார்ன்பில்கள் உள்ளன. கிரேட் ஹார்ன்பில் முதல் கிரே ஹார்ன்பில் பறவை வரை இருக்கிறது. ஹார்ன்பில் பறவைகள் பொதுவாக ஒரே ஒரு காதலியைக் கொண்டவை. இந்த பறவைக்ள் ஜோடி நீண்ட காலம் வாழும். இங்கே ஒரு ஹார்ன்பில் ஜோடி பறவைகள் இருக்கிறது.
இந்த ஜோடி பறவைகள் ஒன்றாகச் சென்று மிக நீண்ட காலம் வாழ்கின்றன. இந்த ஜோடிகள் ஒரு கூட்டுக்கு செல்கின்றனர். அவர்கள் ஒன்றாகச் சென்று மிக நீண்ட காலம் வாழ்கிறார்கள்.
இந்த பறவைகள் ஒரு கூட்டுக்கு செல்கின்றன. அந்த கூடு ஏதெனும் ஒரு மரத்தில் அல்லது வேறு ஏதேனும் பறவையின் கூடு அல்லது ஒரு பழைய மரப்பொந்து கூட்டில் இருக்கும்.
அந்த ஜோடி பறவைகள் ஒரு கூட்டைக் கண்டுபிடித்த பிறகு பெண் பறவை உள்ளே நுழையும். அது கூட்டை ஆக்கிரமித்து, என்ன பொருள் கிடைக்கிறதோ அதை உள்ளே இருந்து அடைத்து விடும். இந்த படத்தில் இருப்பதைப் போல, உணவுக்காக ஒரு சிறிய பிளவு திறந்திருக்கும். அதன் உள்ளே ஒரு பெண் ஹார்ன்பில் பறவை இருக்கிறது. அதனால், அவைகள் மரங்களைத் தேர்ந்தெடுக்கும்.
இப்போது அவைகளுக்கு சோதனையான காலம். பெண் பறவை அடுத்த 3-4 மாதங்களுக்கு கூடுக்குள் இருக்கும். அதற்கு ஒரு சிறிய திறப்பு இருக்கும். வெளியே பார்த்து உணவுடன் வரும் கணவன் பறவைக்காக காத்திருக்கும். விரைவில் ஹார்ன்பில் பறவைக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேவ் அரும். அப்போது அதிக உணவு தேவைப்படுகிறது.
அதனால், இப்போது ஆண் பறவை உணவுக்காக காட்டில் சுற்றித் திரியும். உணவை சேகரித்து குடும்பத்திற்கு கொண்டு வரும். குஞ்சுகள் வளரும்போது, அந்த பறவை அதிகம் பயணம் செய்ய வேண்டும். இது அந்த ஆண் பறவையின் அன்றாட வேலை, ஒரு நாளைக்கு பல முறை இப்படி உணவு சேகரிக்க வேண்டியிருக்கும். அந்த ஆண் பறவை தனக்கும் உணவு தேடிக்கொள்ள வேண்டும். குடும்பத்திற்காகவும் உணவு சேகரிக்க வேண்டும்.
இதன் மூலம் ஆண் பறவை கூடுகளை பாதுகாக்க வேண்டும். ஆண் பறவை அருகில் உள்ள பகுதியில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். நகரத்தில் சிறந்த அத்திப்பழங்களைக் கண்டறிய வேண்டும். குஞ்சுகள் பெரியவைகளாக இருப்பதால், அந்த ஆண் பறவை அதிக உணவை சேகரிக்க வேண்டும்.
அப்படி சேகரிக்கப்படும் அனைத்து பழங்களும் கொடுக்கப்படுவதில்லை. கொடுக்கும்போது சில தரையில் கைவிடப்படுகின்றன. அவைகள் பழங்களை முழுவதுமாக விழுங்குகிறார்கள், இந்த செயல்பாட்டில் விதைகள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அப்படி உணவு தேடிச் செல்லும்போது, ஆண் பறவை வராவிட்டால் அல்லது வேட்டையாடப்பட்டால் அந்த குடும்பம் காத்திருந்து இறந்துவிடும். இது இந்த பறவையின் கதையில் கடினமான பகுதி.
அனைத்து பழங்களும் வழங்கப்படுவதில்லை, பரிமாற்றம் நடைபெறும் போது சில வெறுமனே தரையில் கைவிடப்படுகின்றன. அவர்கள் பழங்களை முழுவதுமாக விழுங்குகிறார்கள், இந்த செயல்பாட்டில் விதைகள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.” என்று ஒரு பறவையின் அழகான காதல் வாழ்க்கையைக் குறிப்பிட்டு நெகிழச் செய்துள்ளார்.
இந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் எடுத்துள்ளார். பல்வேறு இடங்களில் இருந்தும் நீண்ட இடைவெளியில் ஹார்ன்பில் பறவையின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியிருக்கிறார். பல்வேறு களங்களில் இந்த நிகழ்வு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மலையில் இரவு முகாமிட்ட போது நான் எடுத்த இந்த வீடியோ. மதிப்புக்குரியது என்று பர்வீன் கஸ்வான் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இந்த ஹார்ன்பில் பறவையின் காதல் கதையைப் போல ஒரு அழகான உருக்கமான காதல் கதையை யாராவது சொல்ல முடியுமா என்றால் கடினம்தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“