முடிந்தால் சிறுத்தையை கண்டுபிடியுங்கள்! வைரல் புகைப்படம்

இணையத்தில் வைரலாகி வரும் சிறுத்தை உருமறைப்பு புகைப்படம்; முடிந்தால் நீங்களும் கண்டுபிடிக்க முயலுங்கள்

Can you spot leopard in this viral photo: சிறுத்தைகள் காட்டில் உள்ள மிக அற்புதமான விலங்குகளில் ஒன்றாகும். அவற்றின் வேகம் மற்றும் சுறுசுறுப்போடு குறிப்பிடத்தக்க உருமறைப்பு திறன்களுக்காக அறியப்படுகின்றன. பெரும்பாலும், இவை  சுற்றியுள்ள புதர்களில் மறைந்திருக்கும். அவற்றை அடையாளம் காண்பது கடினம். இந்த மறைந்திருக்கும் திறனே அவற்றிற்கு எளிதாக இரையை பெற்றுத் தருகிறது. பச்சோந்திகளுக்கு அடுத்தப்படியாக சிறந்த உருமறைப்பு திறன்கள் சிறுத்தைகளுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த புகைப்படம் ஒரு சிறுத்தை உருமறைப்பு புகைப்படம் ஆகும். படத்தில், ஒரு மரம் தெரியும், இது அடர்ந்த புதர்களால் சூழப்பட்டுள்ளது. இப்படியான படத்தை வெளியிட்டு அமித் மெஹ்ரா, தன்னை பின் தொடர்பவர்களுக்கு ஒரு புதிர் விடுத்துள்ளார். அந்த பதிவில், “இந்தப் படத்தில் சிறுத்தைப்புலி உள்ளது. அதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். எந்த வார்த்தைப் பிரயோகமும் இல்லை. என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் பலர் சிறுத்தையை கண்டுபிடிக்க முயன்று தோல்வியடைந்தனர். சிலர் இது ஒரு தந்திரமான கேள்வியா என்று ஆச்சரியப்பட்டனர், மற்றவர்கள் சிறுத்தையைக் கண்டுபிடிக்க புகைப்படத்தின் ஒவ்வொரு மூலையையும் ஸ்கேன் செய்ய முயன்றனர். சிலர் கண்டுபிடிக்க முடியாமல், சிறுத்தை இருக்கும் இடத்தை வெளிப்படுத்தும்படி புகைப்படத்தை பதிவிட்ட அமித்திடம் கேட்டனர்.

இறுதியாக, ஒரு சிலர் நீண்ட, கடினமான ஸ்கேனிங்கிற்குப் பிறகு கண்டுபிடிக்க முடிந்தது. நமக்குத் தெரிந்தபடி, சிறுத்தை, மரத்தின் கீழ் வலதுபுறத்தில் நடுவில் அமர்ந்துள்ளது, காய்ந்த மரம் மற்றும் புற்களால் இந்த அழகான உருமறைப்பு உள்ளது. இந்த புகைப்படம் ஆயிரக்கணக்கான முறை மறுபகிர்வு செய்யப்பட்டு மறு ட்வீட் செய்யப்பட்டது. படத்தை ரீ-ட்வீட் செய்தவர்கள் தங்கள் பதிவுகளில் சிறுத்தை எங்கே உள்ள என்பது குறித்த பல குறிப்புகளையும் பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் எந்தக் காட்டில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம், இது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முடிந்தால் நீங்களும் குறிப்புகளைப் பார்க்காமல் சிறுத்தையைக் கண்டுபிடியுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Can you spot leopard in this viral photo

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express