Vaathi Coming Canada Boys Viral Dance Video வாத்தி கம்மிங் விஜய் | Indian Express Tamil

கனடாவிலும் விஜய் ஆர்மி? என்னா குத்து குத்துறாங்க!

நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கனடாவிலும் விஜய் ஆர்மியா என விவாதத்தை கிளப்பி உள்ளனர்.

கனடாவிலும் விஜய் ஆர்மி? என்னா குத்து குத்துறாங்க!

Vaathi Coming Viral Dance Video News : நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வரும் ‘வாத்தி கம்மிங்’ பாடல் தமிழ் திரையுலக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இந்த பாடலுக்கு நடனமாடி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்வதவர்களின் எண்ண்க்கை லட்சங்களை எட்டும்.

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சச்சின், ரவீந்திர அஸ்வின், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நடிகை சில்பா செட்டி என பல நட்சத்திரங்களும், நெட்டிசன்கள் சிலர் ‘வாத்திங் கம்மிங்’ டான்ஸ் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு கனடாவின் டொராண்டோவைச் சேர்ந்த ஆண்கள் நடனக்குழு ஒன்று நடனமாடி உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘பேஸ்மென்ட் கேங்’ என்ற அந்த நடனக் குழு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டது. வீடியோ பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பெற்று வருகிறது.

நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கனடாவிலும் விஜய் ஆர்மியா என விவாதத்தை கிளப்பி உள்ளனர். சமூக வலைதளங்களில் கனடா ஆண்களின் வாத்தி கம்மிங் நடனத்தை கண்ட பலரும், சிரமமில்லாமல் பாடலில் வரும் அனைத்து ஸ்டெப்களையும் ஆடி அசத்தியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Canadian dance group vaathi coming dance cover