New Update
/
உச்ச நீதிமன்ற விசாரணையின் போது, இந்திய தலைமை நீதிபதி (CJI) டி.ஒய் சந்திரசூட் மற்றும் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி ஆகியோர் இடையே ஹோலி மற்றும் மதுபானம் குறித்து நடைபெற்ற சுவாரஸ்ய உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழில்துறை மதுபானம் தொடர்பான விசாரணையின் போது இந்த உரையாடல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து Law Today தனது X பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி தனது வண்ணமயமான தலைமுடிக்கு மன்னிப்பு கேட்டார். “என்னுடைய வண்ணமயமான முடிக்கு மன்னிக்கவும். இதற்கு காரணம் ஹோலி. வீட்டில் குழந்தைகள், பேரக்குழந்தைகள் அதிகம் இருந்தால் இப்படி தான். உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள முடியாது”என்று நகைச்சுவையாக கூறினார்.
#CourtDialogues: Watch this candid exchange between CJI DY Chandrachud and Senior Advocate Dinesh Dwivedi during the SC nine-judge bench hearing today.
— Law Today (@LawTodayLive) April 2, 2024
Dinesh Dwivedi: Apologies for my colourful hair. It is because of Holi. This is the disadvantage of having lot of kids and… pic.twitter.com/wPdx2T6Axf
அவருக்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “இதற்கும் மதுவுக்கும் சம்பந்தம் இல்லையே” என்று அவரும் நகைச்சுவையாக கூறினார். இதற்கு மீண்டும் பதிலளித்த திவேதி, ஹோலி என்றால் ஓரளவு மது என்று பொருள். நான் ஒப்புக்கொள்ள வேண்டும், எனக்கு விஸ்கி பிடிக்கும்” என்று கூறினார். இதன் பின் உச்ச நீதிமன்றம் விசாரணை மீண்டும் தொடர்ந்தது.
தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் மூத்த வழக்கறிஞர் தினேஷ் திவேதி இடையேயான சுவாரஸ்ய உரையாடல் இப்போது 1,53,000 பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. பலரும் இதற்கு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.