New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/26/yFXs49o9bsGoH3TaomY3.jpg)
கோவையைச் சேர்ந்த ஓவியர் மெழுகுவத்தியில் ஹுசைனியின் ஓவியத்தை வரைந்து அஞ்சலி செலுத்தினார்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த, ஓவியர் UMT ராஜா ஷிகான் உசைனி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மெழுகுவர்த்தியில் அவருடைய உருவத்தை ஓவியமாக வரைந்து, அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
கோவையைச் சேர்ந்த ஓவியர் மெழுகுவத்தியில் ஹுசைனியின் ஓவியத்தை வரைந்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய கராத்தே நிபுணரும், நடிகருமான ஷிகான் உசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். கோவையைச் சேர்ந்த ஓவியர் மெழுகுவத்தியில் ஹுசைனியின் ஓவியத்தை வரைந்து அஞ்சலி செலுத்தினார்.
இந்திய கராத்தே நிபுணரும், நடிகருமான ஷிகான் உசைனி ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 60. சென்னையைச் சேர்ந்த அவர், கராத்தே கலையில் சிறந்து விளங்கியவர். மேலும் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளார்.
கராத்தே கலையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக, ஷிகான் என்ற பட்டம் பெற்றார். நடிகர் விஜய்யின் பத்ரி திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர். மேலும், பல்வேறு திரைப்படங்களில் கராத்தே பயிற்சியாளராகவும், சண்டை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், கராத்தே வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை குனியமுத்தூரை சேர்ந்த, ஓவியர் UMT ராஜா ஷிகான் உசைனி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மெழுகுவர்த்தியில் அவருடைய உருவத்தை ஓவியமாக வரைந்து, அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மெழுகுவத்தியில் ஓவியத்தை வரைந்த அவர், மெழுகுதிரி பற்ற வைத்தவுடன், மெழுகு உருகி கண்ணீர் துளிகள் போல உசைனியின் படத்தின் மீது சொட்டு சொட்டாக விழுவது பார்ப்போரை கண் கலங்க வைத்து இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.