தெரு நாயை தத்தெடுத்து வேலையும் கொடுத்த கார் ஷோரூம்… இந்த மனசு இருக்கே சார்!

அந்த ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி பழகுதல், வரவேற்றல் போன்ற காரணங்களால் டஸ்கனுக்கு பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்துள்ளது அந்நிறுவனம்.

By: August 5, 2020, 2:06:51 PM

Car showroom adopts local stray dog and makes him ‘sales consultant’ : ப்ரேசிலில் இருக்கும் ஹூண்டாய் கார் ஷோரூம் நிறுவனம் தங்கள் விற்பனை நிலையத்திற்கு நாய் ஒன்றை வேலைக்கு எடுத்துள்ளது. நான்கு கால் பணியாளர் என்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. என்னடா இது என்று அதிசயத்து பார்க்கும் போது, முகநூல் பதிவு ஒன்று என்ன விவகாரம் என்று விவரித்துள்ளது.

 

View this post on Instagram

 

Minha vida aqui não é só trabalho não ???? #tucson #prime

A post shared by TUCSON PRIME (@tucson_prime) on


ஹுண்டாய் ஷோரூமில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த தெருநாய்க்கு டஸ்கன் ப்ரைம் என்று பெயரிட்டு ஐ.டி. கார்டும் கொடுத்துள்ளது அந்நிறுவனம். ஹூண்டாய் ஏஜென்ஸிக்கு தினமும் வந்து சென்று கொண்டிருந்த இந்த நாய்க்குட்டியை தத்து எடுத்த அந்நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களின் குழு ஒன்றில் வேலைக்கும் எடுத்துள்ளனர்.

‘pawfessional consultant’ என்று இந்த குட்டி நாய்க்கு வேலை கொடுத்துள்ளனர் அவர்கள். இந்த செய்தி வைரலாக பரவ அனைத்து நெட்டிசனகளும், ஏன் விலங்குகளிடத்தில் மனிதர்கள் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறவும் ஆரம்பித்துள்ளனர். அந்த ஷோரூமிற்கு வரும் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி பழகுதல், வரவேற்றல் போன்ற காரணங்களால் டஸ்கனுக்கு பதவி உயர்வும் கொடுத்து கௌரவித்துள்ளது அந்நிறுவனம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த நாய்க்குட்டியின் சாந்தமான அணுகுமுறையால் வாடிக்கையாளர்களின் வரவும் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று அந்த கிளை மேலாளர் எமர்சன் மாரியானோ தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Car showroom adopts local stray dog and make him sales consultant

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X