New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-12T165342.594.jpg)
Cat plays piano : பியானோ இசை இருந்தது. முதலில் கைகளால் பியானோவை இசைத்த பூனை, பின் தலையால் அதை இசைக்க துவங்கியது. இன்னும்
பசி ருசி அறியாது என்பர். அந்த பசி உணர்வையே எளிய மற்றும் இனிய இசையின் மூலம் தெரிவிக்கிறது இந்த பூனை. பியானோ இசைத்து பசியை தெரிவிக்கும் பூனையின் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் வின்சுலோ பூனை வளர்த்து வருகிறார். 7 வயதான அந்த பூனை, அப்பகுதியில் உள்ள அனைவரின் பேவரைட் ஆகும். இந்த பூனைக்கு பசி ஏற்படும் பட்சத்தில், அது பியானோவை இசைத்து தனது பசியை, உரிமையாளருக்கு தெரிவிக்கிறது. மற்ற நேரங்களில், அதுபாட்டுக்கு மற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஒருநாள் பூனைக்கு பசி எடுத்தபோது, அது தன் உணர்வை உரிமையாளருக்கு தெரிவிக்க, பியானோ இசைத்தது. “Is it time for dinner? When is dinner time?” என்று கேட்பதுபோல, பியானோ இசை இருந்தது. முதலில் கைகளால் பியானோவை இசைத்த பூனை, பின் தலையால் அதை இசைக்க துவங்கியது. இன்னும் டின்னர் நேரம் வரவில்லை., சிறிதுநேரம் காத்திரு என்று அதன் உரிமையாளர் கூறுவதுபோல் உள்ள அந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
பூனை உள்ளிட்ட விலங்குகள், தங்களுக்கு பசி உணர்வு ஏற்படும் பட்சத்தில் கொடூரமாக கத்தி பசி உணர்வை வெளிப்படுத்தும். ஆனால், இந்த பூனை, பியானோவை இசைத்து பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளதாக SWNS பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூனை 8 வார காலஅளவில் இருந்தே தான் வளர்த்து வருவதாகவும், பியானோ இசைக்கையில் அதை அருகில் வைத்துக்கொள்வேன். பியானோ இசைப்பதை அது உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ள வின்சுலோ, இதை தன் குழந்தையாக பாவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.