Advertisment

வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பூனை; வியக்கும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ

பல நாடுகளில் மனிதர்கள் இன்னும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகிற நிலையில் ஸ்மார்ட்டான பூனை ஒன்று வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cat used western toilet, smart cat used western toilet, western toilet used cat, வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனை, பூனை வைரல் வீடியோ, வரைல் வீடியோ, viral video, cat used western toilet viral video, cat viral video, smart pet viral video

cat used western toilet, smart cat used western toilet, western toilet used cat, வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்திய பூனை, பூனை வைரல் வீடியோ, வரைல் வீடியோ, viral video, cat used western toilet viral video, cat viral video, smart pet viral video

பல நாடுகளில் மனிதர்கள் இன்னும் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துகிற நிலையில் ஸ்மார்ட்டான பூனை ஒன்று வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

செல்லப் பிராணிகளை வளர்க்கும் பலரும் அவைகளின் அறிவுத் திறன், குறும்புகள் வீட்டில் உள்ள மனிதர்களிடம் காட்டும் அன்பு ஆகியவற்றைக் கண்டு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்வார்கள். பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை அவர்களின் வீடுகளில் ஒரு உறுப்பினராகவே ஆகிவிடும். அப்படி, வளர்கிற செல்லப் பிராணிகள், அவற்றை வளர்ப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே செய்ய முயற்சி செய்யும். இதுவரை எந்த விலங்குகளும் செய்யாததை செய்து அவர்களை அதிசயிக்கவைக்கும்.

பொதுவாக பூனைகள் நுண்ணுணர்வு கொண்டவை. அவை வளர்ப்பவர்களின் மீது உரசி அன்பை வெளிப்படுத்துபவை. அந்த வகையில், ஸ்மார்ட்டான ஒரு பூனை ஒன்று வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தியுள்ளது.

பூனை வளர்க்கும் பெட் பிரியர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது பூனை வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் என்னுடைய பூனையை வீடியோ எடுத்தேன். உண்மையிலேயே இதைச் செய்ய அது எப்படிக் கற்றுக் கொண்து என்று எனக்குத் தெரியாது” என்று தெரிவித்து வியந்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை 3.45 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 52 ஆயிரம் பேர்களுக்கு மேல் ரீ டுவிட் செய்துள்ளனர். இதனால், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பல நாடுகளில் சிலர் தங்கள் வீடுகளில் கழிப்பறை இருந்தபோதும், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வரும் நிலையில், ஒரு பூனை வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்தியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதே போல, கடந்த ஆண்டு பூனையின் புகைப்படத்தை வைத்து ஒரு டெம்பிளேட் மீம் வைரலானது. பெண் ஒருவர் வெள்ளை பூனையை பார்த்து ஆவேசமாக கத்துவது போலவும், தனக்கு பிடிக்காத உணவை உரிமையாளர் வைத்திருப்பது போலவும் அந்த படத்தில் இடம் பெற்றிருந்தது.

இந்த மீமில் இருந்த பெண் 2011-ல் வெளிவந்த தி ரியல் ஹவுஸ் வைப் ஆப் பிவெர்லி எனும் அமெரிக்க தொடரில் நடித்த பெண். இவரது பெயர் டெய்லர் ஆம்ஸ்ட்ராங். மீமில் இடபெற்ற பூனையின் பெயர் ஸ்மேட்ஜ்.

இந்த மீம் புகைப்பட எப்படி வைரலானது என்றால், இந்த பூனையை வளர்ப்பவர் அதன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அதெற்கென தனியாக கணக்கும் வைத்துள்ளார். இந்த இரு வேறு புகைப்படங்களையும் நெட்டிசன் ஒருவர் தனது இணையத்தில் பதிவிட இந்த டெம்பிளேட் உலகம் முழுவதும் வைரலானது.

Video Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment