மர்மமான முறையில் காணமால் போகும் பூனைகள் இறைச்சிக்காக விற்கப்படுவதாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
’ரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காகா பிரியாணி ‘காமெடி எந்த அளவுக்கு ஃபேமஸ் ஆச்சோ அதே அளவிற்கு கூடவே சேர்ந்து காகா பிரியாணி வதந்தியும் அதிகளவில் உலா வர ஆரம்பித்தது. கோழி தட்டுபாடு காலத்தில் சில ஹோட்டல்களில் காகங்களை இறைச்சிக்காக பயன்படுத்துவதாக அதிர்ச்சி ஏற்படுத்தும் வதந்திகள் பரவின.
சில காலம் கழித்து அவை வதந்திகளாகவே மறைந்தன. அதன் பின்பு சமீபத்தில் எழுந்த புதிய சர்ச்சை தான் நாய்க்கறி. சென்னை சென்ட்ரலில் கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி என்ற தகவல் தீயாக பரவியது. ஆட்டு இறைச்சி என்று பொய் கூறி நாய்க்கறி கொண்டு வந்ததாகவும், நீண்ட வால் வைத்து அவை நாய்க்கறி என்று கண்டுப்பிடித்ததாகவும் அடுத்தடுத்து தகவல் பரவின.
இதனால் இறைச்சி வியாபாரம் மட்டுமில்லை பிரியாணி வியாபாரமும் படுத்தது. ஆட்டுக்கறி என கூறி பிரபல ஹோட்டல்கள் நாய்க்கறியை சேர்ப்பதாக ஆதாரமே இல்லாத பல தகவல்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பரவின.
இந்நிலையில் தான் நேற்றைய தினம், அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி அனைத்தும் ஆட்டு இறைச்சி தான் என்று ஆய்வின் முடியில் அறிவிக்கப்பட்டது. ஒருவழியாக வதந்தி ஓய்ந்தது இனி ஹோட்டலில் ஒரு வெட்டு வெட்டலாம் என்று காத்திருப்பவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு அருகிலுள்ள மதுரவாயலில் பிரபல அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வளர்க்கப்பட்ட பூனைகள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பூனை வளர்ப்பவர்கள் இந்த புகாரை பதிவு செய்துள்ளனர். இந்த புகாரில் தாங்கள் வளர்த்து வந்த 4 பூனைகளை 1 வாரத்திற்கு மேலாக காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல் துறையின், அப்பார்ட்மெண்டில் இருக்கும் சிடிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது சில மர்ம நபர்கள் பூனைகளை கோணிப்பையில் வைத்து மறைத்து செல்வது பதிவாகியுள்ளது. இதுக்குறித்து காவல்துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் இருப்பவர்களை விசாரித்து வருகின்றனர்.
பூனைகளை அவர்கள் திருடி சென்ற காரணம் என்னவாக இருக்கும் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் கே. சர்வான் இதுக்குறித்து பேசுகையில், சமீபகாலமாக பூனைகள் அதிகளவில் காணமால் போவதாக தகவல் வருவதாகவும், சில மர்ம நபர்கள் பூனைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Cats missing resident says they may be killed for meat
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!