சீனாவின் மெயின் ரோட்டில் கார் ஒன்றினால் ஏற்பட்ட விபத்து அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. அதே சமயத்தில், அந்த காரில் பயணித்தவர்களின் செயலும் பலருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து... எங்கு நடக்கும், எப்படி நடக்கும், யாருக்கு நடக்கு என்று தெரியாது. அப்படி தற்செயலாய் நடப்பதால் தான் அதற்கு பெயர் விபத்து. அந்த வகையில் சீனாவில் கார் ஒன்றினால் ஏற்பட்ட கோர விபத்து அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சியைப் பார்த்த பலரும், அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், காரை ஓட்டிச் சென்றவரின் மனிதாபிமானம் இல்லாத செயலும் பலரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது. சீனாவின் பிரதான சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று நடு வழியில் நின்றது. இதனால் காருக்கு பின்னாடி வந்துக் கொண்டிருந்த இரண்டு லாரிகளும் தடுமாறினர்.
இருந்த போது, பின்னால் வந்த ட்ரக்கை ஓடி வந்த டிரைவர், காரை இடிக்காமல் அவர்களை காப்பாற்றி பிரேக் போட்டுக் கொண்டே முன்னாடி செல்கிறார். ஆனால், நேரம் அவரை பழிவாங்க அந்த ட்ரக் விபத்துக்குள்ளாகி சாலையில் கவிழ்கிறது. அதற்குள் அவர்கள் வந்த கார் ஸ்டாட் ஆக அதில் இருந்தவர்கள், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல், விபத்துக்குள்ளாப டிரைவரை ஓடிச் சென்றுக் கூட பார்க்காமல் எங்களுக்கு என்ன வந்தது என்பது போல் செல்கின்றன.
,
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன. அடிப்பட்ட டிரைவரை மருத்துவனைக்கு அழைத்து சென்ற போக்குவரத்து காவல் துறையினர் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். விபத்துக் குறித்து கூறிய அந்த டிரைவர், “நான் சென்ற வேகத்திற்கு என்னால் அந்த காரை இடித்து தள்ளி இருக்க முடியும். ஆனால், அந்த காரில் குழந்தைகள் இருந்ததால் தான் பிரேக் போட்டு விபத்தை தவிர்க்க முயற்சித்தேன். ஆனால் அவர்கள் நான் உயிரோட இருக்கிறேனா என்று பார்க்க கூட காரை நிறுத்தவில்லை” என்றூ வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த காட்சிகள், அங்கிருக்கும் ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.