கோவை டவுண்ஹால் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சிட்டி பஜார் என்ற துணிக் கடையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து துணிகளை திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Advertisment
இது குறித்து அந்தக் கடையின் உரிமையாளர் நாசர் அப்பகுதி வணிகர் சங்க தலைவருக்கு தகவல் தெரிவித்து உள்ளதாகவும், மேலும் அருகே உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து பின்னர் காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
கோவை மாநகரின் மத்திய பகுதியான மாநகராட்சி அருகே இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அப்பகுதி ஒட்டி ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு கடைகள் உள்ளது. காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“