நெஞ்சை பதபதைக்கும் வீடியோ: தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை துடிதுடித்து இறந்த சோகம்!!

தாயின் மடியிலிருந்து தவறி விழுந்த 10 மாதக் குழந்தையின் வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைத்துள்ளது.

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற மால் ஒன்றில் இளம் தம்பதினர் ஒருவர், தங்களின் 10மாதக் குழந்தையுடன் விடுமுறை கழிக்க வந்தனர். அவர்கள் இருவரும் மாலில் உள்ள பல இடங்களில் செல்பீ எடுத்துக் கொண்டு சந்தோஷமாக சுற்றி வந்தனர்.

அப்போது தான் யாரும் எதிர்ப்பார்க்காத சமயத்தில் அந்த துயரமான சம்பவம் அரங்கேறியது. தம்பதியினர் இருவரும், மேல் தளத்தில் இருந்து கிழே இறங்க, எஸ்கேலட்டரை உபயோகித்தனர். அப்போது தாயின் மடியிலிருந்த 10 மாதக் குழந்தை திடீரென்று கை தவறி எஸ்கேல்ட்டரில் இருந்து கீழே விழுந்தது.

விழுந்த நேரத்திலியே குழந்தை தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த கோர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த வீடியோ பார்ப்பச்வர்களின் நெஞ்சை பதற வைத்துள்ளது.

இந்த விபத்திற்கு தாயின் கவனக் குறைவே காரணம் என்கின்றனர் சில,=ர், அத்துடன் இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அந்த தம்பத்தினர் மாலை சுற்றும் போதெல்லாம் அதிகமான செல்ஃபீக்களை எடுத்ததாகவும், அப்போதே அந்த குழந்தையை பொறுப்புடன் கவனிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், தாயின் கையிலிருந்தே குழந்தை இறப்பது எவ்வளவு வேதனையானது என்பது எவராலும் விவரிக்க முடியாத வலி என்பது மறுக்கமுடியாத உண்மை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close