New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/26/Ww1ZboGjmML2pq1IcQiz.jpg)
மரம் சாய்ந்த சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு கார், சரியான நேரத்தில் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவையில் மரம் சாய்ந்த சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு கார், சரியான நேரத்தில் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரம் சாய்ந்த சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு கார், சரியான நேரத்தில் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை - பாலக்காடு சாலை, குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரம் சாய்ந்த சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு கார், சரியான நேரத்தில் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் மரம் சாய்ந்த சி.சி.டி.வி வீடியோ; பெரும் விபத்து தவிர்ப்பு #viralvideo pic.twitter.com/YXahpbsqaL
— Indian Express Tamil (@IeTamil) May 26, 2025
மழைக்காலத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மரம் விழுதல் அல்லது மின்சார வயர்கள் அறுந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த குழுவினர் தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீர் தேக்கத்தைத் தடுக்கும் பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.