சென்னை விமானநிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகை குறித்து பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி வெளியிட்டுள்ள பதிவு, நெட்டிசன்களுக்குள் பயங்கரமான கருத்து பரிமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
விமானநிலையத்தின் தரையில் சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று இருக்கவேண்டிய இடத்தில் கம்பளம் சாப்பிடுவது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது என்ற தவறான மொழிபெயர்த்தலின் மூலமாக, இந்த போட்டோ, சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
View this post on Instagram
What an outrage India. All I want to do is go down on your curry-stained airport carpet…
இந்த போட்டோ 2015ம் ஆண்டில் எடுக்கப்பட்டது ஆகும். ஷபானா ஆஸ்மி என்ற முக்கிய பிரமுகர், அதை தற்போது வெளியிட்டுள்ள நிலையில், அந்த பதிவு வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெட்டிசன்கள் எள்ளி நகையாடுவதோடு நின்றுவிடாமல், பலரும் சரியான மொழிபெயர்ப்புகளை தெரிவித்து வருவது வரவேற்கத்தக்கது.