New Update
/
UPI போன்ற டிஜிட்டல் பேமண்ட் முறைகள் இந்தியாவில் பரிவர்த்தனைகளை மாற்றியுள்ளன, இதனால் தனிநபர்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் பணம் அனுப்புவதும் பெறுவதும் எளிதாகிறது.
இருப்பினும், சென்னையில் வசிக்கும் ஒரு பெண் எதிர்கொண்ட சமீபத்திய சம்பவம், எல்லோரும் ஆன்லைனில் பணம் செலுத்துவதை நம்பவில்லை அல்லது ஏற்கவில்லை என்பதை காட்டுகிறது, இது சிலரை சிரமத்தில் ஆழ்த்துகிறது.
சுவேதா குணசேகரன் என்ற பெண் ஒரு ஆப் மூலம் ஆட்டோவில் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளார். ஆனால், ஆட்டோவில் ஏறியபிறகு தான் ஒரு சங்கடமான சூழ்நிலையில் தான் மாட்டியிருப்பதை சுவேதா உணர்ந்தார்.
அதற்கு காரணம் ஆட்டோவில் ஒட்டியிருந்த ஒரு நோட்டீஸ் தான். அதில் ’ஜி பே இங்கு ஏற்கபடாது, ஏடிஎம்-இல் பணம் எடுக்க வண்டி நிற்காது’ என்று எழுதியிருந்தது.
ஆன்லைன் கேப் முன்பதிவுகளுக்கு கேஷ்லெஸ் பேமண்ட் செலுத்துவதை ஆப்ஷனாக வைத்திருந்த சுவேதா, ஆட்டோ ஓட்டுநர் UPI கட்டணங்களை ஏற்கவில்லை என்பதை உணர்ந்ததும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி போனார்.
இந்த அனுபவத்தை தன் X பக்கத்தில் சுவேதா பகிர்ந்து கொண்டார். அவரது இந்த பதிவுக்கு பலரும் தங்கள் ரியாக்ஷனை வெளிப்படுத்தினர்.
இந்தியா முழுவதும் டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் அதிகரித்து வந்தாலும், இந்த வசதியை முழுமையாக நம்பாத விற்பனையாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் கேஷ்லெஸ் பரிவர்த்தனையை நம்பி இருப்பவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.