என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து கார்டு அல்லது யு.பி.ஐ மூலம் பணம் செலுத்துவது வரை, இந்த கடையில் எல்லாமே இயந்திரத்தைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள ஒரு விற்பனை இயந்திரத்திலிருந்து புதிய இட்லிகள் வெளிவருவதைக் காட்டிய ஒரு வீடியோ வைரலானது நினைவிருக்கிறதா? அதே மாதிரி இப்போது, சென்னையில் உள்ள ‘தி பி.வீ.கே பிரியாணி’ என்ற விற்பனை நிலையம், வென்டிங் மெஷின்களில் இருந்து பிரியாணி வாங்குவதை நடைமுறைப்படுத்தியுள்ளது.
பிரியாணி இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று. பிரியாணியில், கொல்கத்தா அல்லது ஹைதராபாத் அல்லது ஆந்திரா அல்லது கேரளா எந்த மாநிலத்து பிரியாணி சிறந்தது என்று மக்கள் அடிக்கடி விவாதிக்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் உள்ள உணவுப் பிளாக்கிங் பக்கமான உணவு வேட்டை (Food Vettai), பாய் வீட்டு கல்யாணம் (Bai Veetu Kalyanam) (BVK) என்ற கடையின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவின் முதல் ஆள் இல்லாத பிரியாணி விற்பனை கடை என்று விளம்பரப்படுத்துகிறது. பல்வேறு வகையான பிரியாணிகளில் இருந்து ஒருவர் எப்படி தேர்வு செய்யலாம் என்பதை வீடியோ காட்டுகிறது. பிரியாணியைத் தவிர, சைவ உணவுகள், ஸ்டார்டர்கள் அல்லது பானங்கள் போன்ற பிற விருப்பங்களும் உள்ளன. உணவகத்தில் நான்கு முதல் ஐந்து விற்பனை இயந்திரங்கள் உள்ளன. அங்கு வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரை வைக்கலாம்.
என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பது முதல் கார்டு அல்லது யு.பி.ஐ மூலம் பணம் செலுத்துவது வரை, கடையில் உள்ள அனைத்தும் தானியங்கி முறையில் இயங்குகின்றன. ஆர்டர் செய்த பிறகு, உணவு தயாரிக்கப்படுவதைக் காட்டும் டைமர் திரையில் காட்டுகிறது. நான்கு நிமிடங்களில் பிரியாணி பார்சல் செய்யப்பட்ட சூடான பெட்டி தயாராகிவிட்டது. சென்னை சோமநாதபுரம் கொளத்தூரில் இந்த உணவகம் உள்ளது.
கீழே உள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்:
ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோ 65,000க்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. ஆள் இல்லாத அல்லது ஆளில்லா விற்பனை என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, பெங்களூருவில் இட்லிகளுக்கான ஏ.டி.எம் இயந்திரம் வீடியோ வைரலானது. தொழில்முனைவோர்களான ஷரன் ஹிரேமத் மற்றும் சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஃப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் மூலம் தயாரிக்கப்பட்ட இயந்திரம், வெறும் 12 நிமிடங்களில் 72 இட்லிகளை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“