ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நிவாரணப் பணிகளில் அரசு பயன்படுத்துவதா? டுவிட்டரில் திடீர் ட்ரெண்ட்
சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னார்வலர்களை கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி டுவிட்டரில் திடீரென ட்ரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னார்வலர்களை கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி டுவிட்டரில் திடீரென ட்ரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
rss, chennai corporation, rss volunteers distribute corona relief fund, ஆர்.எஸ்.எஸ், சென்னை மாநகராட்சி, டுவிட்டர் ட்ரெண்ட், twitter trend new hashtag, chennaicorp remove rss, coronavirus, lock down
சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னார்வலர்களை கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி டுவிட்டரில் திடீரென ட்ரெண்ட் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு தவிர மக்கள் வெளியே வரக் கூடாது என்பதால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதனால், கட்ட தொழிலாளர்கள், தினக்கூலிகள், வியாபாரிகள், விவசாயிகள் என பலரும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனால், கொரோனா நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. அதே போல, பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. அதே போல, வெளிமாநில தொழிலாளர்களுக்கும் அரிசி பருப்பு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், பதிவுசெய்யப்படாத தினக் கூலி தொழிலாளர்கள், குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் எந்த நிவாரணத்தையும் பெற முடியாத நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கும் வழியில்லாமல் வாடிவருகின்றனர்.
Advertisment
Advertisements
இதனால், ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில், தன்னார்வலர்கள் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்து வந்தனர். தன்னார்வலர்கள் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும்போது மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக திரள்வதால், கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் ஆபத்து உள்ளதால் தமிழக அரசு, தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு, தமிழக அரசு, கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கவே தன்னார்வலர்களை அனுமதிக்கவில்லை என்று தெரிவித்திருந்தது. ஆனாலும், முன்னதாகவே அனுமதி பெற வேண்டும். தன்னார்வலர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். சுகாதாரப் பணியாளர்கள் உடன் சென்று வழங்கலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். சில இடங்களில் நிவாரணப் பொருள்களை வழங்கும்போது அந்த மக்களிடம் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக பொய் பரப்புரை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
இதையடுத்து, சமூக ஊடகங்களில் தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினால் கொரோனா தொற்று ஏற்படும் என்றால், ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் மூலம் கொரோனா பரவாதா அரசை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டது. அதே போல, தெலங்கானாவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காவல்துறையினர் போல செயல்பட்டு அத்துமீறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடந்து, டுவிட்டரில் நேற்று முதல் #ChennaiCorpRemoveRSS என்ற ஹேஷ் டேக் இந்திய அளவில் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. சென்னை மாநராட்சி கொரோனா நிவாரணப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை ஈடுபடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"