Advertisment

ஆட்டோவை இரண்டு சக்கரத்தில் ஓட்டி சென்னைவாசி கின்னஸ் சாதனை

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான எம். ஜகதீஷ் 2.2 கி.மீ தூரத்திற்கு ஆட்டோவை இரண்டு சக்கரத்தால் ஓட்டி சாதனை படைத்துள்ளார்

author-image
WebDesk
New Update
Chennai man makes Guinness World Record by driving auto-rickshaw

சென்னையில் ஆட்டோவில் போகும் நபர்களுக்கே அந்த உண்மை புரியும் என்று தான் ஆரம்பிக்க வேண்டும். காலையில் வேலைக்கு செல்லும் போதோ, கொட்டும் மழையின் போதோ, அல்லது சிக்னலில் நின்று கொண்டு முக்கியமாக எங்காவது போக வேண்டும் என்று யோசிக்கும் போதோ ஆட்டோக்கள் நம்மை காப்பாற்றுகின்றன. அவர்கள் போகும் வேகத்திற்கு வண்டியில் இருந்து இறங்கி, என்னா வேகம்.. என்ன நெனைச்சுட்டு வண்டி ஓட்டுறாங்க என்று எல்லாம் கேட்டுருப்போம்.

Advertisment

ஆனால் சென்னை சாலையில் ஆட்டோ ஓட்டுவதெல்லாம் ஒரு கலை. அந்த கலையை கற்றுத் தேர்ந்த ஒருவர் நெக்ஸ்ட் லெவலுக்கு சென்றுவிட்டார். சைடு வீலி செய்து கின்னஸ் சாதாஇ படைத்துள்ளார்.

கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் அதிகாரப்பூர்வமான இணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான எம். ஜகதீஷ் 2.2 கி.மீ தூரத்திற்கு ஆட்டோவை இரண்டு சக்கரத்தால் ஓட்டி சாதனை படைத்துள்ளார் இருப்பினும் இந்த சாதனை 2015ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. இருப்பினும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இந்த ஆட்டோவை ஓட்டி சாதனை புரிந்துள்ளார் அந்த நபர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment