தி.மு.க அணிகளுக்கு இடையே போட்டி: தீவிர கிரிக்கெட் பயிற்சியில் களமிறங்கிய சென்னை மேயர் பிரியா!

தி.மு.க சார்பு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திடீரென தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
priya mayor cricket

தி.மு.க சார்பு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திடீரென தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார்.

தி.மு.க சார்பு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா திடீரென தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் சென்னை சேப்பாக்கம் மெரினா விளையாட்டுத் திடலில் பிப்ரவரி 15,16 தேதிகளில் தி.மு.க அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. பகல் - இரவு போட்டியாக நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் போட்டியை மத்திய சென்னை தொகுதியின் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் நடத்துகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியில், தி.மு.க-வில் உள்ள அனைத்து சார்பு அணிகளும் பங்கேற்க உள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகராடிச் மேயர் பிரியா, இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக தனது அணியினருடன் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். 

Advertisment
Advertisements

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டியில் தி.மு.க இளைஞரணி,  அயலக அணி, மாணவரணி, விளையாட்டு மேம்பாட்டு அணி என 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை கவுன்சிலர்கள் அணியும் பங்கேற்று விளையாடுகிறது.

அதனால், இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது அணியினருடன் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். சென்னை மேயர் பிரியா, கருப்பு நிற டீ-சர்ட், டிராக் பாண்ட் அணிந்து கிரிக்கெட் வீராங்கணையாக மாறி பேட்டிங், பவுலிங் பயிற்சி செய்தார். இதையடுத்து, மேயர் பிரியா தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Viral Video priya

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: