இன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளின் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் பரவி வருகின்றன. இதனிடையே, நேற்று இரவு பல இடங்களில் மின்னல் தாக்கிய வீடியோக்களை, எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Chennai rain - Lightning strikes illuminate the night sky in purple, videos go viral
குறிப்பாக, சோழிங்கநல்லூர் பகுதி அருகே எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவில், ஒரு கட்டடத்தின் மேற்பகுதியில் மின்னல் தாக்குவது போன்று பதிவாகியுள்ளது.
வீடியோவைக் காண:
#sholinganallur #ChennaiRains pic.twitter.com/9OpkthuSPq
— Common man (@common_man_IN_) October 14, 2024
சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். அந்த வீடியோவின் பின்னூட்டத்தில், மின்னல் ஒளி அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இது போன்ற காணொளியைக் கண்டு வெகு நாள்களாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னையின் நிலத்தடியில் இருக்கும் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டதை போன்று காட்சியளிப்பதாக ஒரு பயனாளர் உருவகப்படுத்தியுள்ளார்.
வீடியோவைக் காண:
Another Ground Strike 😱 #ChennaiRains @ChennaiRains pic.twitter.com/tqdHi0JZye
— Saravanan95 (@Saravanan_957) October 14, 2024
இதேபோல், மற்றொரு பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோவில், சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது மின்னல் தாக்கிய காட்சி பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட வீடியோவிற்கும் பார்வையாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
வீடியோவைக் காண:
Some good slow mo shots from my balcony! #Chennairains are here!
— Coach Sagar (@sagar_coach) October 14, 2024
Stay safe everyone. pic.twitter.com/Kbo51fmMay
2மற்றொரு எக்ஸ் தள பயனாளர் தனது வீட்டின் மாடியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் வானம் ஊதா நிறத்தில் காட்சியளிக்கிறது. மேலும், மழையின் போது பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு பயனாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மழையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார். இதேபோல், ஐடி துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வரும் 18-ஆம் தேதி வரை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.