பைக்கில் தப்பிய திருடன்… துரத்தி மடக்கிய எஸ்ஐ! சினிமா பாணி சேஸிங் வீடியோ

இரண்டு மொபைல் திருடர்களை பைக்கில் துரத்திச் சென்று மடக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் ஆக்ஷன் திரைப்படத்திற்கு இணையாக, சென்னை உதவி ஆய்வாளர் இரண்டு மொபைல் திருடர்களை துரத்திச் சென்று மடக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மணலி புதுநகர் எம்எம்டிஏ காலனியில் வசித்து வரும் ரவி, மாதவரம் மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர்.

அப்பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அண்டிலின் ரமேஷ்  தனது இருசக்கர வாகனத்தில் துரத்தி சென்று திருடர்களை சாதூர்யமாக மடக்கிப் பிடித்தார். இதன்மூலம், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 11 செல்போன்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

 

 

இந்த சிசிடிவி காட்சியினை ட்விட்டரில் பதிவு செய்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ரமேஷின் துரித நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் விதமாக, தனது அலுவலத்தில் தேநீர் விருந்து அளித்ததாக தெரிவித்தார்.

நெட்டிசன்களின் ரியாக்சன்கள்:

 

 

 

 

ஒரு திருடன் தப்பிவிட்டாலும், மற்றொரு திருடனை,  மிகவும் தைரியத்துடன், விடா முயற்சியோடு துரத்தி பிடித்த சம்பவம் வரவேற்கத்தக்கது என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai sub inspector chasing two mobile snatchers viral video

Next Story
ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு போராட்டத்தின் போது உணவளித்த தாபா!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com